வாகனங்களில் பக்கவாட்டுக் கண்ணாடிகளுக்குப் பதிலாக கேமிரா- புதிய முயற்சியில் ஹூண்டாய்

சென்சார் கேமிராக்கள் மூலம் எரிபொருள் செலவு ஏதும் இல்லை என்றும் ஹூண்டாய் தெளிவுபடுத்தியுள்ளது.

வாகனங்களில் பக்கவாட்டுக் கண்ணாடிகளுக்குப் பதிலாக கேமிரா- புதிய முயற்சியில் ஹூண்டாய்
ஹூண்டாய்
  • News18
  • Last Updated: July 21, 2019, 6:43 PM IST
  • Share this:
கார்களில் பக்கவாட்டுக் கண்ணாடிகளுக்குப் பதிலாக கேமிரா பொருத்தும் முயற்சியில் ஈடுபடப்போவதாக ஹூண்டாய் மோபிஸ் தெரிவித்துள்ளது.

தென் கொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச அளவில் நியூ ஜென் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கார் உற்பத்தியில் புதுமை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மூன்று உயர் ரக சென்சார் கேமிராக்கள் வாகனத்தினுள் பொருத்தப்படும்.

இதன் மூலம் பக்கவாட்டுக் கண்ணாடிகளில் பார்ப்பதில் உள்ள சில சிரமங்களும் இனி இருக்காது என்கிறது ஹூண்டாய். மேலும், சென்சார் கேமிராக்களால் எரிபொருள் செலவு ஏதும் இல்லை என்றும் ஹூண்டாய் தெளிவுபடுத்தியுள்ளது.


இதுகுறித்து ஹூண்டாய் மோபிஸ் துணைத்தலைவர் க்ரிகொரி பரதாஃப் கூறுகையில், “வரும் காலங்களில் கார் உற்பத்தியைப் பொறுத்த வரையில் வடிவமைப்பில் மட்டுமல்லாது செயல்பாடுகளில் பல தொழில்நுட்ப அப்டேட்கள் தேவைப்படுகின்றன. சென்சார்களில் மட்டுமல்லாது இன்னும் பல தொழில்நுட்பங்களையும் ஹூண்டாய் அறிமுகம் செய்யும்” என்றார்.

மேலும் பார்க்க: எதிர்பாராத வீழ்ச்சியை சந்தித்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ்..!
First published: July 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்