2018-ல் மட்டும் 7 லட்சம் கார்களை விற்ற ஹூண்டாய் இந்தியா!

சான்ட்ரோ, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய ’ஹேட்ச்-பேக்’ ரக கார்களுக்கு இந்தியாவில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.

Web Desk | news18
Updated: January 1, 2019, 5:57 PM IST
2018-ல் மட்டும் 7 லட்சம் கார்களை விற்ற ஹூண்டாய் இந்தியா!
santro
Web Desk | news18
Updated: January 1, 2019, 5:57 PM IST
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் மட்டும் கடந்த 2018-ம் ஆண்டில் சுமார் 7 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய சான்ட்ரோ, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய ’ஹேட்ச்-பேக்’ ரக கார்களுக்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பால் தான் ஹூண்டாய் இச்சாதனையை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.

டிசம்பரில் மட்டும் ஹூண்டாய் 42,093 கார்கள் விற்றுள்ளது. இது கடந்த 2017 ஆண்டின் டிசம்பர் மாதத்தை விட 4.8 சதவிகிதம் அதிகம் எனக் கூறப்படுகிறது.

இதே ஹூண்டாய் நவம்பர் மாதத்தில் விற்ற கார்களின் எண்ணிக்கை 43,709 கார்கள். மொத்தம் 2018-ம் ஆண்டில் 7,10,012 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. 2017-ம் ஆண்டின் எண்ணிக்கை 6,78,221 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2018-ல் அதிகரித்த விற்பனை குறித்து ஹூண்டாய் விற்பனைப் பிரிவு அதிகாரி கூறுகையில், “ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவுக்கு 2018-ம் ஆண்டு மிகவும் சிறந்த ஆண்டாக அமைந்துவிட்டது. இந்தியாவுக்கான மிகச்சிறந்த குடும்ப கார்களை ஹூண்டாய் இந்தாண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றினாலே இந்த ஆண்டு ஹூண்டாய் மிகப்பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. 2019-ம் ஆண்டிலும் புதிய கார்களை இந்தியாவுக்கு ஏற்ற வகையில் அறிமுகம் செய்வோம். ஆனால், கடந்த ஆண்டுகளைவிட 2019-ம் ஆண்டில் கார்களின் விலை அதிகரிக்கும் எனக் கருதுகிறோம்” என்றார்.

மேலும் பார்க்க:
First published: January 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...