10 நாளில் 120 பேர் முன்பதிவு... நாட்டின் முதல் எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு!

'நாட்டின் முதல் எலெக்ட்ரிக் காரை டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்ப்பதிலும் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்'.

10 நாளில் 120 பேர் முன்பதிவு... நாட்டின் முதல் எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு!
ஹூண்டாய் கோனா. (படம்: manav Sinha/ News18.com)
  • News18
  • Last Updated: July 19, 2019, 6:21 PM IST
  • Share this:
இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் காரான ஹூண்டாய் கோனாவுக்கான முன்பதிவு தொடங்கிய 10 நாளில் இதுவரையில் 120 பேர் பதிவு செய்துள்ளனர்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் ஜூலை மாதம் 9-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் 500 வாகனங்கள் என உற்பத்தி செய்து விற்கப்போவதாக ஹூண்டாய் தெரிவித்திருந்தது. ஹூண்டாய் கோனாவின் விலை 25.30 லட்சம் ரூபாய் ஆகும். விலை உயர்வாக இருப்பதாகத் தெரிந்தாலும் மற்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் காரின் விலை நியாயமானதாக இருப்பதாகவே கூறப்படுகிறது.

விலையை கட்டுக்குள் வைக்க காரின் உதிரி பாகங்களை இணைக்கும் பணியை இந்தியாவிலேயே ஹூண்டாய் மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து ஹூண்டாய் இந்தியா விற்பனைப் பிரிவுத் தலைவர் விகாஸ் ஜெயின் கூறுகையில், “இந்தியாவின் முதல் பசுமை எஸ்யூவி காரான கோனா எலெக்ட்ரிக் காருக்கு மிகுந்த ஆதரவு கிடைத்துள்ளது. வெளியான 10 நாளிலேயே 120 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.


நாட்டின் எதிர்கால தொழில்நுட்பங்களை கருத்தில் கொண்டு ஏற்றுக்கொள்ளும் மக்களின் வரவேற்பைக் காட்டியுள்ளது. கோனா குறித்த விவரங்களை அறிந்துகொள்ள நாடு முழுவதிலும் உள்ள டீலர்ஷிப் இடங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர். நாட்டின் முதல் எலெக்ட்ரிக் காரை டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்ப்பதிலும் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்” என்றார்.

மேலும் பார்க்க: சாலை விதிகளை மதித்தால் ஸ்விகி, ஜொமேட்டோ 50% தள்ளுபடி கூப்பன்..!
First published: July 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்