ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி விலை ₹1.5 லட்சம் வரை குறைய வாய்ப்பு..!

ஏசி சார்ஜர் மூலம் 1 மணி நேரத்துக்கு சார்ஜ் ஏற்றி 50 கி.மீ வரையில் பயணிக்கலாம். 2.8 kW கொண்ட போர்டபிள் சார்ஜரும் கோனா உடன் கொடுக்கப்படுகிறது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி விலை ₹1.5 லட்சம் வரை குறைய வாய்ப்பு..!
ஹூண்டாய் கோனா
  • News18
  • Last Updated: July 30, 2019, 6:05 PM IST
  • Share this:
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்ததால் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆன ஹூண்டாய் கோனாவின் விலை 1.5 லட்சம் ரூபாய் வரையில் குறைய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான எலெக்ட்ரிக் சார்ஜர்களுக்கான ஜிஎஸ்டி வரியும் 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 1-ம் தேதி முதலே மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது. இதனால் 25.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி-யின் விலை 1.5 லட்சம் ரூபாய் வரையில் குறைய வாய்ப்பு உள்ளது.


கோனாவில் உள்புறத் தோற்றம் மிகவும் கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பல தொழில்நுட்ப அப்டேட்கள் உடனான கோனாவில் 7 இன்ஸ் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன், ஸ்மார்ட்ஃபோன் கனெக்‌ஷன், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

நேவிகேஷன் அம்சங்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வாகனம் இயக்கும் போது மட்டுமே இயங்கும் ஏசி என எலெக்ட்ரிக் கார் மேம்படுத்தப்பட்டுள்ளது. 39.2 kWh லித்தியம் பேட்டரி கொண்ட கோனா, முழு சார்ஜ் ஏற 6 மணி நேரம் ஆகிறது. ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 452 கி.மீ வரையில் பயணிக்க முடியும். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப கூடுதலாக வால் சார்ஜர் வேண்டுமென்றால் வழங்கப்படும்.

வால் சார்ஜர் விலை 70 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரையில் ஆகும். ஏசி சார்ஜர் மூலம் 1 மணி நேரத்துக்கு சார்ஜ் ஏற்றி 50 கி.மீ வரையில் பயணிக்கலாம். 2.8 kW கொண்ட போர்டபிள் சார்ஜரும் கோனா உடன் கொடுக்கப்படுகிறது. சார்ஜிங் ஸ்டேஷன் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உடன் இணைந்து எலெக்ட்ரிக் சார்ஜிங் மையங்களை ஹூண்டாய் அறிமுகப்படுத்த உள்ளது.மேலும் பார்க்க: 10 நாளில் 120 பேர் முன்பதிவு... நாட்டின் முதல் எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு!
First published: July 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading