மாருதி சுசூகியை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்த ஹூண்டாய்..!

எஸ்யூவி ரகக் கார்கள் வரிசையில் ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா காருக்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்து வருகிறது.

மாருதி சுசூகியை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்த ஹூண்டாய்..!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: August 5, 2019, 12:27 PM IST
  • Share this:
இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையப் பொறுத்தவரையில் நீண்ட காலமாக முதலிடத்தில் நீடித்துவந்த மாருதி சுசூகி நிறுவனத்தைத் தற்போது ஹூண்டாய் நிறுவனம் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

வாகன விற்பனையில் ஹூண்டாய் நிறுவனத்தைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் மாருதி சுசூகியும் மூன்றாம் இடத்தில் மஹிந்திரா நிறுவனமும் உள்ளது. கடந்த ஜூலை மாதம் மட்டும் ஹூண்டாய் நிறுவனம் 16,234 வாகனங்களை விற்றுள்ளது. இவற்றுள் க்ரெட்டா, வென்யூ, டஸ்கான் மற்றும் கோனா எலெக்ட்ரிக் ஆகிய வாகனங்கள் டாப் இடங்களில் உள்ளன.

இதில் கடந்த இரு மாதத்தில் யூவி ரகக் கார்கள் விற்பனையில் மட்டும் ஹூண்டாய் 16,200 கார்களும் மஹிந்திரா 16,003 கார்களும் மாருதி சுசூகி 15,178 கார்களும் விற்பனை ஆகியுள்ளன. எஸ்யூவி ரகக் கார்கள் வரிசையில் ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா காருக்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்து வருகிறது.


நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி நிலவரம் மாறினாலும் ஒட்டுமொத்த கார் உற்பத்தி நிறுவனங்களும் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு கடுமையான விற்பனை வீழ்ச்சியையே சந்தித்து உள்ளன. குறிப்பாக பயணியர் ரக வாகனங்களின் விற்பனை சரிந்துள்ளது.

மேலும் பார்க்க: அறிமுகமான ஒரே மாதத்தில் 1,508 வாகனங்கள் விற்பனை - உற்சாகத்தில் MG ஹெக்டார்
First published: August 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading