ஜனவரி 21-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் ஹூண்டாய் ‘ஆரா’..!

ஆரா-வில் 8.0 இன்ச் அளவிலான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உடன் வருகிறது.

ஜனவரி 21-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் ஹூண்டாய் ‘ஆரா’..!
ஹூண்டாய் ஆரா
  • News18
  • Last Updated: January 9, 2020, 3:25 PM IST
  • Share this:
ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஆரா செடான் காரை வருகிற ஜனவரி 21-ம் தேதி வெளியிடப்படுகிறது.

நேர்மறை அதிர்வலைகளை இந்தக் கார் பரப்பும் என்ற மையக் கருத்தின் கீழ் இந்தக் காருக்கு ‘ஆரா’ எனப் பெயரிட்டுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இந்தியர்களுக்கு ஏற்ற சொகுசு, பாதுகாப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் ஆரா BS6 டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பெறும் இந்தியாவின் முதல் செடான் கார் ஆகும். புதிய தலைமுறையினரைக் கருத்தில் கொண்டும் இந்தியாவின் வருங்கால மாசுக்கட்டுப்பாடு திட்டங்களை மனதில் வைத்தும் ஆரா செடானை வடிவமைத்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.


ஹூண்டாய் ஆரா செடானுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. ஆரா வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து முன்பதிவு செய்துகொள்ளலாம். இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று என்ஜின் ஆப்ஷன்களுடன் ஆரா உள்ளது. ஹூண்டாய் தயாரிப்புகளிலேயே ஆரா-வின் கட்டமைப்பு அதிநுட்பம் நிறைந்த பலமான ஸ்டீல் வடிவமைப்பைப் பெற்றுள்ளதாம்.

ஆரா-வில் 8.0 இன்ச் அளவிலான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உடன் வருகிறது. காரில் அர்கமிஸ் ப்ரீமியம் சவுண்டு, 5.3 இன்ச் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், வயர்லெஸ் சார்ஜிங் என அசத்தல் அம்சங்கள் நிறைந்துள்ளன.

மேலும் பார்க்க: 2020-ல் கலக்க வரும் டாப் கார்கள்... ஒரு பார்வை!
First published: January 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்