12 ரகங்களில் பட்ஜெட் விலையில் வெளியானது ஹூண்டாய் ஆரா செடான்!

Hyundai Aura Sedan | உட்புறத்தில் 8.0 டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

12 ரகங்களில் பட்ஜெட் விலையில் வெளியானது ஹூண்டாய் ஆரா செடான்!
ஹூண்டாய் ஆரா
  • News18
  • Last Updated: January 21, 2020, 5:46 PM IST
  • Share this:
நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின்னர் ஹூண்டாய் நிறுவனம் தனது காம்பேக்ட் ரக செடான் ’ஆரா’ காரை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

பட்ஜெட் விலையில் 5,79,900 ரூபாய்க்கு ஆரா செடான் அறிமுகமாகியுள்ளது. மொத்தம் 12 ரகங்களில் இந்தக் கார் விற்பனையில் உள்ளது. ஆரா-வின் டாப் ரகத்தின் விலை 9,22,700 ரூபாய் ஆகும். ஆராவிற்கான முன்பதிவு 10 ஆயிரம் ரூபாயில் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது.

வெளிப்புறத் தோற்றத்தில் மிகவும் அடக்கமாகவே ஆரா உள்ளது. ப்ரொஜெக்டர் வகையிலான ஹெட்லைட், ஃபாக் லைட் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் ஸ்போர்ட்டி தோற்றத்திலான பம்பர் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கூப்பே காரின் ஸ்டைலில் R15 டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.


உட்புறத்தில் 8.0 டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைக்கப்பட்டுள்ளது. முதல் தர காரின் அத்தனை சொகுசு வசதிகளும் ஆராவில் வழங்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் BS-VI T-GDI பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் ஈகோடார்க் டீசல் என்ஜின், மற்றும் அதிதிறன் வாய்ந்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் சிறப்பம்சமாகும்.

மொத்தம் 12 ரகங்களில் 6 வண்ணங்களில் ஆரா விற்பனைக்கு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பார்க்க: இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான ஹேட்ச்பேக் கார்- சர்வதேச விருதை வென்ற டாடா-வின் கார் எது?
First published: January 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்