இந்தியாவில் களமிறங்கிய அதிகவேக லம்போர்க்கினி!

அதிவேகமான Lamborghini Aventador SVJ தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளது.

Web Desk | news18
Updated: December 22, 2018, 11:48 AM IST
இந்தியாவில் களமிறங்கிய அதிகவேக லம்போர்க்கினி!
அதிவேகமான Lamborghini Aventador SVJ தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளது.
Web Desk | news18
Updated: December 22, 2018, 11:48 AM IST
லம்போர்க்கினி வகைகளிலேயே அதிவேகமான லம்போர்க்கினி அவென்டேடர் SVJ, சில மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகமானது. சூப்பர் ஃபாஸ்ட் கார், ஹை- பெர்ஃபார்மன்ஸ் எனப் பல அடைமொழிகளோடு களம் இறங்கிய Lamborghini Aventador SVJ தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளது.

பெங்களூருவில் Lamborghini Aventador SVJ முதல் வாகனம் வந்துள்ளது. லிமிடெட் கார்கள் மட்டுமே இந்த வகையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையி பெங்களுரூவைச் சேர்ந்த ஒருவர் இந்த அதிவேக லம்போர்க்கினியை வாங்கியுள்ளார்.

பெங்களுரைச் சேர்ந்தவர் வாங்கிய Lamborghini Aventador SVJ தான் இந்தியாவில் முதல் காராகவும் உலகளவில் விற்பனையான மூன்றாவது காராகவும் உள்ளது.

அதிகவேகத் திறன் கொண்ட V-12 என்ஜின் பொருத்தப்பட்டுள்ள Aventador SVJ 8,500rpm-க்கு 566 கிலோவாட் வெளியீடு கொண்டதாகம் 720Nm டார்க் வெளியீடு கொண்டதாகவும் உள்ளது. 2.8விநாடிகளில் மணிக்கு 100கிமீ வேகத்தையும் மணிக்கு 200கிமீ வேகத்தை 8.6 விநாடிகளில் கடக்கும் திறனையும் Lamborghini Aventador SVJ பெற்றுள்ளது.

ஏரோடைனமிக் தொழில்நுட்பங்களை காப்புரிமை செய்துள்ள லம்போர்க்கினியின் வெளிப்புறத்தோற்றம், உள்வடிவமைப்பு என அனைத்தும் இந்தக் காரின் கூடுதல் மதிப்பாக உள்ளன. இந்தியாவில் மெட்டாலிக் ப்ளூ நிறத்தில் வந்துள்ளது Lamborghini Aventador SVJ.

மேலும் பார்க்க: தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
First published: December 22, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...