உலகப் புகழ்பெற்ற கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் மீது அமலாக்கத்துறை வழக்கு!

news18
Updated: September 9, 2019, 5:36 PM IST
உலகப் புகழ்பெற்ற கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் மீது அமலாக்கத்துறை வழக்கு!
ரோல்ஸ் ராய்ஸ்
news18
Updated: September 9, 2019, 5:36 PM IST
இந்திய பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தங்களைப் பெற லஞ்சம் அளித்ததாக , உலக புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

உலகில் பணக்கார கார் பிரியர்களின் முதலாவது சாய்ஸ் எது என்று கேட்டால் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு சொல்லும் ஒரே பதில் ரோல்ஸ் ராய்ஸ் கார். சொகுசு கார் உலகில் இன்றும் பிரதான இடம் வகிக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், சார்ல்ஸ் ரோல்ஸ் மற்றும் ஹென்ரி ராய்ஸ் என்ற இருவரால் 1904-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.

விமான என்ஜின் தயாரிப்பு நிறுவனமாக இருந்த இது, ஜெர்மனியின் பி.எம்.டபுள்யூ. உதவியோடு சொகுசு கார்களை தயாரிக்கத் தொடங்கியது. தற்போதும் உதிரிபாகங்களை உற்பத்தி செய்து உலகம் முழுவதற்கும் ஏற்றுமதி செய்து வருகிறது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம். அப்படி உதிரிபாகங்களை இந்தியாவிற்கு வழங்க மேற்கொண்ட ஒப்பந்தத்தால்தான் அந்த நிறுவனம் மீது வழக்கு பாய்ந்துள்ளது.


இந்தியாவின் ஹெச்ஏஎல், ஓஎன்ஜிசி, கெயில் ஆகிய நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனங்களுக்கு, உதிரி பாகங்களை அளிப்பது தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிக்க ஏஜென்டுக்கு கமிஷனாக 77 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு ரகசிய கடிதம் கிடைக்கப் பெற்றது.

அதனை அடுத்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துக்கும், ஒப்பந்தங்களை பெற்றுத் தந்த அசோக் பத்னிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும், 5 ஆண்டுகளாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில் கடந்த ஜூலையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

Loading...

இதில் ரோல்ஸ் ராய்ஸ்சின் இந்திய நிறுவனம், சிங்கப்பூரை சேர்ந்த அசோக் பத்னி மற்றும் அவரது நிறுவனங்களான ஆஸ்மோர் பிரைவேட் லிமிடெட், மும்பையை சேர்ந்த டர்போ டெக் இன்ஜின் சர்வீசஸ் மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், ஓஎன்ஜிசி, கெயில் நிறுவனத்தின் அதிகாரிகள் மீது லஞ்சம் மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்சுடன் மட்டும் கடந்த 2000 முதல் 2013ம் ஆண்டு வரை 4,736 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தக வாய்ப்பை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்துஸ்தான் ஏராநாட்டிக்சிடம் 100 அவான் மற்றும் அலிசான் இன்ஜின் உதிரி பாகங்களை சப்ளை செய்ய ஏஜென்டாக செயல்பட்ட அசோக் பாட்னிக்கு 'வர்த்தக ஆலோசகர்' என்ற வகையில் மட்டும் 18 கோடி ரூபாயை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது என சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இதேபோல், ஓஎன்ஜிசி, ஜிஏஐஎல் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக ஒப்பந்தங்களை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துக்கு பத்னி பெற்று தந்துள்ளார்.

ஓஎன்ஜிசியிடம் 73 ஆர்டர்களை பெற 29 கோடியே 81 லட்சம் ரூபாயும், கெயிலிடம் ஆர்டர் பெற 8 கோடியே 80 லட்சம் ரூபாயும் என மொத்த கமிஷனாக 28 கோடியே 9 லட்சம் ரூபாயை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தமாக ஹெச்ஏஎல், ஓஎன்ஜிசி, கெயில் ஆகிய நவரத்னா நிறுவனங்களின் ஆர்டர்களைப் பெற அசோக் பத்னி மூலம் அதிகாரிகளுக்கு 77 கோடி ரூபாயை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் லஞ்சமாக அளித்துள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

சிபிஐயின் இந்த குற்றச்சாட்டு அடிப்படையில் கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது குறித்து அமலாக்கத் துறை விரிவான விசாரணையும் நடத்த உள்ளது.

புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறுனவம் லஞ்சம் கொடுத்து இந்தியாவில் ஆர்டர் பெற்றதாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கு, உலகளவில் மோட்டார் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

First published: September 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...