நீண்ட தொய்வுக்குப் பின்னர் மிதமான வளர்ச்சியைப் பெற்ற மாருதி சுசூகி!

யூவி ரக கார்களான விதாரா ப்ரெஸ்சா, எஸ்-க்ராஸ், எர்டிகா ஆகிய கார்களின் விற்பனை 26.6 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளன.

நீண்ட தொய்வுக்குப் பின்னர் மிதமான வளர்ச்சியைப் பெற்ற மாருதி சுசூகி!
ஆல்டோ
  • News18
  • Last Updated: February 3, 2020, 6:10 PM IST
  • Share this:
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனரான மாருதி சுசூகி கடந்த ஜனவரி மாதம் விற்பனையில் 1.6 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் மாருதி சுசூகி 1,51,721 கார்களை விற்பனை செய்திருந்தது. உள்நாட்டு விற்பனையைப் பொறுத்தவரையில் 1,44,499 வாகனங்களை விற்பனை செய்து 1.7 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது மாருதி சுசூகி. அதிகப்படியான விற்பனையை மாருதியின் மினி ரக கார்களான ஆல்டோ மற்றும் வேகன் ஆர் ஆகிய கார்கள் பெற்றுள்ளன.

கடந்த ஜனவரியில் மட்டும் இந்த இரு கார்களின் விற்பனை மட்டும் 10.8 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. சிஃப்ட், செலெரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசையர் ஆகிய கார்களின் விற்பனை 11.6 சதவிகித விற்பனை வளர்ச்சியைப் பெற்றுள்ளன. யூவி ரக கார்களான விதாரா ப்ரெஸ்சா, எஸ்-க்ராஸ், எர்டிகா ஆகிய கார்களின் விற்பனை 26.6 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளன.


ஏற்றுமதியைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டு ஜனவரியில் 9,571 வாகனங்கள் ஏற்றுமதி ஆகியிருந்த நிலையில் இந்தாண்டு ஜனவரியில் 9,624 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: 3 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் மலிவாய் இருக்கும்..! நிதி ஆயோக் சிஇஓ கணிப்பு
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்