டிசம்பர் மாதம் கார் விற்பனை 0.43% சரிவு!

2017-ம் ஆண்டு 2,39,723 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது என்று தரவுகள் கூறுகின்றன.

Web Desk | news18
Updated: January 14, 2019, 9:53 PM IST
டிசம்பர் மாதம் கார் விற்பனை 0.43% சரிவு!
கார்
Web Desk | news18
Updated: January 14, 2019, 9:53 PM IST
உள்நாட்டில் கார் விற்பனை டிசம்பர் மாதம் 0.43 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புத் திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் 2018 டிசம்பர் மாதம் 2,38,692 வாகனங்கள் விற்பனையானதாகத் தெரிவித்துள்ளது.

இதுவே 2017-ம் ஆண்டு 2,39,723 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது என்று தரவுகள் கூறுகின்றன.

துணை பிரிவுகளாகப் பிரித்தால் பயணிகள் வாகனம் 2.01 சதவீதம் சரிந்து 1,55,159 ஆகவும், பயன்பாட்டு வாகனம் 2.33 சதவீதம் சரிந்து 65,506 ஆகவும் டிசம்பர் மாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.


வணிக வாகனங்கள் பிரிவிலும் உள்நாட்டு விற்பனை 7.80 சதவீதம் சரிந்து 75,984 ஆக உள்ளது.

ஜனவரி மாதம் கார்கள் மீதான விலையை மாருதி சுசூகி, டாடா உட்பட அனைத்து நிறுவனங்களும் உயர்த்தியுள்ளதால் மேலும் விற்பனை சரிய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: எய்ம்ஸ்-க்கு உரிமை கொண்டாடும் பாஜக!

Loading...

First published: January 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...