ஏப்ரல் 1-ம் தேதி முதல் BS-VI கார்கள் மட்டுமே..!- அதிரடி ஆஃபர்களை வழங்கும் மாருதி, ஹூண்டாய்!

ஹேட்ச்பேக் ரக கார்களில் மாருதி சுசூகியின் டாப் மாடலான ஆல்டோ 800 BS-VI காருக்கு 60 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் BS-VI கார்கள் மட்டுமே..!- அதிரடி ஆஃபர்களை வழங்கும் மாருதி, ஹூண்டாய்!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: March 3, 2020, 1:36 PM IST
  • Share this:
ஏப்ரல் 1-ம் தேதி முதல் BS-VI மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட உள்ளன. இந்த சூழலில் பல கார்களுக்கும் மாருதி சுசூகி, ஹூண்டாய் போன்ற பெரும் நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து வருகின்றன.

ஹேட்ச்பேக் ரக கார்களில் மாருதி சுசூகியின் டாப் மாடலான ஆல்டோ 800 BS-VI காருக்கு 60,000 ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பலகட்ட வரவேற்புகளைப் பெற்றுள்ள மாருதி சுசூகி வேகன் ஆர் BS-VI காருக்கு 20,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ், 20,000 ரூபாய் கேஷ்பேக் மற்றும் 5,000 ரூபாய்க்கான கார்ப்பரேட் தள்ளுபடி உட்பட அதிகபட்சமாக 45000 ரூபாய் வரையில் தள்ளுபடி உள்ளது.

சிஃப்ட் BS-VI, பலேனோ BS-VI, டிசைர் BS-VI, XL6 BS-VI ஆகிய கார்களுக்கும் 15,000 முதல் 20,000 ரூபாய் வரையில் சலுகைகள் உள்ளன. ஹூண்டாய் நிறுவனமும் ஹூண்டாய் i10 காருக்கு அதிகப்பட்சமாக 20 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் அறிவித்துள்ளது. ஹோண்டா சிட்டி காருக்கு 45000 ரூபாய் தள்ளுபடி உள்ளது.


மேலும் பார்க்க: முற்றிலும் BS-VI எரிபொருள்... மார்ச் 1 முதல் அப்டேட் ஆகும் பாரத் பெட்ரோலியம்!
First published: March 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading