அதிக செலவு ஆகிறது... முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை வெளியிடுவதில் மாருதி சுசூகி சுணக்கம்!

உட்கட்டமைப்பு, மொத்த உற்பத்தி எனப் பல பிரச்னைகள் ஏற்பட்டு வருவதால் தொடர்ந்து மாருதி சுசூகியின் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

அதிக செலவு ஆகிறது... முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை வெளியிடுவதில் மாருதி சுசூகி சுணக்கம்!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: September 3, 2019, 5:41 PM IST
  • Share this:
செலவு அதிகம் ஆவதால் மாருதி சுசூகி தனது முதல் எலெக்ட்ரிக் காரை வெளியிடுவதில் சுணக்கம் காட்டி வருகிறது.

மாருதி சுசூகி தனது முதல் எலெக்ட்ரிக் காரை அடுத்த ஆண்டு வெளியிடும் என அறிவித்திருந்தது. ஆனால், உட்கட்டமைப்பு, மொத்த உற்பத்தி எனப் பல பிரச்னைகள் ஏற்பட்டு வருவதால் தொடர்ந்து மாருதி சுசூகியின் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

பெரும் முயற்சி எடுத்து செலவு செய்தாலும் மக்கள் உடனடியாக எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆதரவு அளிப்பார்களா என்ற கேள்வியும் நிர்வாகத்தை முடக்கியுள்ளதாம். “விலைச்சலுகைகள் இன்றி எடுத்ததும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது பெரிய கஷ்டமான காரியமாகவே உள்ளது” என்கிறார் மாருதி சுசூகி இந்தியாவின் மூத்த நிர்வாக இயக்குநர் சி.வி.ராமன்.


மேலும் அவர் கூறுகையில், “இன்னும் சோதனைகள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன. வரம்பு நிலை, வெப்பநிலை, சார்ஜிங் நேரம் ஆகியவற்றின் மீது சோதனை நடந்து வருகிறது. சார்ஜிங் உட்கட்டமைப்பு, வாடிக்கையாளர் அளிக்கும் வரவேற்பு மற்றும் முக்கியமாக செலவு. இவை மூன்றும் எங்களுக்குப் பெரிய சவாலாக உள்ளது. ஒரு சாதாரண வாகனத்தைவிட புதிய எலெக்ட்ரிக் வாகன மாற்றம் என்பது இரண்டரை மடங்கு அதிகம் செலவு ஆகிறது” என்றார்.

மேலும் பார்க்க: தொடர்ந்து ஏழாம் மாதமாக உற்பத்திக் குறைப்பு நடவடிக்கை- மோசமான வீழ்ச்சியில் மாருதி சுசூகி

ஆகஸ்ட் மாத கார்களின் விற்பனை பன்மடங்கு சரிவு
First published: September 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்