இந்தியாவில் கார் விற்பனை கடும் சரிவு- கடந்த ஆண்டைவிட 26% வீழ்ச்சி!

கமர்ஷியல் வாகனங்களைப் பொறுத்த வரையில் மே மாதம் விறனை விகிதம் கடந்த ஆண்டைவிட 10.02 சதவிகிதம் வீழ்ந்து 68,847 வாகனங்களே விற்பனை ஆகியுள்ளன.

இந்தியாவில் கார் விற்பனை கடும் சரிவு- கடந்த ஆண்டைவிட 26% வீழ்ச்சி!
மாதிரிப்படம் (Reuters)
  • News18
  • Last Updated: June 11, 2019, 4:45 PM IST
  • Share this:
இந்தியாவில் மே மாதம் மட்டும் கார்கள் விற்பனை 26% வீழ்ச்சி அடைந்துள்ளது.

பேசஞ்சர் கார் விற்பனை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் மட்டும் 3,01,238 வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன. அதுவே, 2019-ம் ஆண்டு இந்த விற்பனை விகிதம் 20.55% வீழ்ந்து வெறும் 2,39,347 கார்களே விற்பனை ஆகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) வெளியிட்டுள்ளது.

இரு சக்கர வாகன விற்பனையைப் பொறுத்த வரையில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 12,22,164 வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில் இந்தாண்டு மே மாதம் விற்பனை 4.89% வீழ்ந்து 11.62,373 வாகனங்களே விற்பனை ஆகியுள்ளன.


கமர்ஷியல் வாகனங்களைப் பொறுத்த வரையில் மே மாதம் விற்பனை விகிதம் கடந்த ஆண்டைவிட 10.02 சதவிகிதம் வீழ்ந்து 68,847 வாகனங்களே விற்பனை ஆகியுள்ளன.

மேலும் பார்க்க: 2020 முதல் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே!- டொயோட்டா அதிரடி!
First published: June 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்