ரூ.25 ஆயிரம் கொடுத்து உங்கள் ‘நிசான் கிக்ஸ்’-ஐ முன்பதிவு செய்யுங்கள்

உயர் ரக லெதர் டேஷ்போர்டு, மழை உணரும் சென்சார் வைப்பர்கள், இரண்டு ஏர்பேக், லெதர் சீட்கள், ஸ்மார்ட்போன் ஆப் இணைப்பு எனப் பல அம்சங்கள் இப்புதிய நிசான் கிக்ஸ் எஸ்யூவி-யில் உள்ளது.

Web Desk | news18india
Updated: December 16, 2018, 2:41 PM IST
ரூ.25 ஆயிரம் கொடுத்து உங்கள் ‘நிசான் கிக்ஸ்’-ஐ முன்பதிவு செய்யுங்கள்
New Nissan Kicks. (Image: Abhinav Jakhar/News18.com)
Web Desk | news18india
Updated: December 16, 2018, 2:41 PM IST
நிசான் இந்தியா 2019-ம் ஆண்டில் விற்பனைக்கு வர உள்ள நிசான் கிக்ஸ் எஸ்யூவி-க்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

நிசான் கிஸ்க் எஸ்யூவி காரை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாகவோ, நேரடியாக ஷோரூம்களிலோ சென்று 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2019-ல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிசான் கிக்ஸ்-ன் ஆன்ரோடு விலை விரைவில் அறிவிக்கப்படும்.

அமெரிக்க கிக்ஸ் போல இல்லாமல் MO ரக தளத்துடன் உள்ள இந்திய கிக்ஸ் வருகிறது. வெளிப்புறத் தோற்றத்தில் புதிய வடிவமைப்பைக் கொண்டதாக இருந்தாலும் உள்புறஹ் தோற்றம் நிசான் டெரனோ, ரெனால்ட் கேப்டூர், டஸ்டர் போன்ற ரகங்களைப் போல் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல்/ டீசல் என்ஜின் ரகமாக வெளிவரும் நிசான் கிக்ஸ் 1.5 லிட்டர் எரிபொருள் டேங்க் உடன் உள்ளது.

ஐந்து ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அமையப்பெற்றுள்ள 1498cc பெட்ரோல் என்ஜின் 106பிஎஸ் பவருடன் 142 என்.எம் டார்க் வெளியீடு கொண்டதாக உள்ளது. ஆறு ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட 1461cc டீசல் என்ஜின் 110 பிஎஸ் பவருடன் 240 என்.எம் டார்க் வெளியீடு கொண்டதாக உள்ளது.

உயர் ரக லெதர் டேஷ்போர்டு, மழை உணரும் சென்சார் வைப்பர்கள், இரண்டு ஏர்பேக், லெதர் சீட்கள், ஸ்மார்ட்போன் ஆப் இணைப்பு எனப் பல அம்சங்கள் இப்புதிய நிசான் கிக்ஸ் எஸ்யூவி-யில் உள்ளது.

இதுகுறித்து நிசான் மோட்டார்ஸ் இந்தியக் கிளை இயக்குநர் ஹர்தீப் சிங் கூறுகையில், “சர்வதேச மாடல்களையும் கார் தொழில்நுட்பங்களையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எங்கள் பெரு முயற்சிக்கு சான்று தான் நிக்சான் கிக்ஸ் எஸ்யூவி. மேம்பட்ட எஸ்யூவி வடிவமைப்புடன் வெளிவந்துள்ள கிக்ஸ் இன்றைய கால மக்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறோம்” என்றார்.
Loading...
மேலும் பார்க்க: மக்கள் ஆதரவோடு ஆலையை திறப்போம் - ஸ்டெர்லைட் நிர்வாகம்
First published: December 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...