5ஜி ஸ்மார்ட்போனே இன்னும் வரவில்லை... அதற்குள் 5ஜி உடனான BMW iNext எஸ்யூவி கார் அறிமுகம்!

"2021-ம் ஆண்டு முதல் இந்தக் கார் விற்பனைக்கு வர உள்ளது"

5ஜி ஸ்மார்ட்போனே இன்னும் வரவில்லை... அதற்குள் 5ஜி உடனான BMW iNext எஸ்யூவி கார் அறிமுகம்!
BMW-iNext
  • News18
  • Last Updated: January 11, 2020, 5:06 PM IST
  • Share this:
5ஜி தொழில்நுட்பத்துடனான கனெக்டட் காராக BMW iNext எஸ்யூவி கார் உலகின் முதல் ரகமாக அசத்த வருகிறது.

BMW நிறுவனம் தொலைநோக்கு சிந்தனையுடன் 5ஜி தொழில்நுட்பத்திலான iNext எஸ்யூவி சொகுசு காரை அறிமுகம் செய்ய உள்ளது. 2021-ம் ஆண்டு முதல் இந்தக் கார் விற்பனைக்கு வர உள்ளது. இன்பில்ட் 5ஜி சிம் கார்டு உடன் இந்தக் கார் பயன்பாட்டுக்கு வரும்.

இன்னும் ஸ்மார்ட்போன்களே 5ஜி தொழில்நுட்பத்தை ஏற்காத சூழலில் எஸ்யூவி ரக கார் ஒன்றை 5ஜி தொழில்நுட்பத்தில் BMW அறிமுகம் செய்கிறது. உங்களது ஸ்மார்ட்போன் 5ஜி இல்லையென்றாலும் இந்தக் காரின் 5ஜி தொழில்நுட்பம் பயனாளருக்கு கூடுதல் பயன்களைத் தரும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.


CES 2020 கார்கள் கண்காட்சியில் இந்தக் கார் பார்வைக்கு வர உள்ளது. எலெக்ட்ரிக் காரான BMW iNext உற்பத்தி இந்த ஆண்டு முதல் முழுவீச்சில் நடைபெற உள்ளது.

மேலும் பார்க்க: ஹூண்டாயை வீழ்த்திய மாருதி சுசூகி... சிறந்த எஸ்யூவி பட்டத்தைப் பெற்ற கார் எது..?
First published: January 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்