1.22 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த புதிய BMW 7 சீரிஸ் செடான்..!

BMW 730Ld (டீசல்) மற்றும் BMW 740Li (பெட்ரோல்) ஆகிய ரகங்கள் சென்னை தொழிற்சாலையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.

1.22 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த புதிய BMW 7 சீரிஸ் செடான்..!
BMW-7 சீரிஸ்
  • News18
  • Last Updated: July 26, 2019, 12:58 PM IST
  • Share this:
சென்னையில் உற்பத்தியான புதிய BMW 7 சீரிஸ் செடான் ரக கார்கள் 1.22 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளன.

இதுகுறித்து BMW இந்தியத் தலைவர் ஹான்ஸ் பேர்டெல்ஸ் கூறுகையில், “இந்தியாவின் சொகுசுக் கார்கள் வரிசையில் BMW-வின் புதிய அடையாளமாக BMW 7 சீரிஸ் செடான் கார் இருக்கும். வசதி, வடிவமைப்பு என அனைத்திலும் முற்றிலும் மாறுபட்டு அதிகப்பட்ச தொழில்நுட்ப அப்டேட்கள் உடன் இந்த BMW 7 சீரிஸ் செடான் வந்துள்ளது.

BMW-ன் உச்சபட்ச திறன் இந்தக் காரில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சொகுசு கார்களின் வருங்கால வளர்ச்சியை உணர்ந்தே BMW 7 சீரிஸ் செடான் ஹைபிரிட் ரகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ளக்-இன்-ஹைபிரிட் ரகமாக இந்தியாவில் வெளியாகும் முதல் காரும் இதுவே. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் BMW 7 சீரிஸ் செடான் பூர்த்தி செய்யும்” என்றார்.


இந்தியாவில் புதிய BMW 7 சீரிஸ் ‘X’, ‘M’ மற்றும் ‘i’ ரகங்களில் உள்ளன. BMW 730Ld (டீசல்) மற்றும் BMW 740Li (பெட்ரோல்) ஆகிய ரகங்கள் சென்னை தொழிற்சாலையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சென்னை தொழிற்சாலையில் கஸ்டமைஸ் செய்தும் தரப்படுகிறது.

மேலும் பார்க்க: 3% வரையில் விலையை அதிகரித்த மெர்சிடிஸ் பென்ஸ்..!
First published: July 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்