100-வது ஆண்டு விழாவில் ‘எலெக்ட்ரிக்’ மாற்றத்தை அறிவித்த பென்ட்லி..!

2.5 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தில் சீறும் பென்ட்லி EXP 100 GT காரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 300 கி.மீ ஆகும்.

Web Desk | news18
Updated: July 24, 2019, 3:43 PM IST
100-வது ஆண்டு விழாவில் ‘எலெக்ட்ரிக்’ மாற்றத்தை அறிவித்த பென்ட்லி..!
பென்ட்லி. (Image: AFP Relaxnews/ Bentley)
Web Desk | news18
Updated: July 24, 2019, 3:43 PM IST
எலெக்ட்ரிக் கார், செல்ஃப் ட்ரைவிங் என பல அப்டேட்களை தனது 100-வது ஆண்டு விழாவில் வெளியிட்டுள்ளது பென்ட்லி.

பென்ட்லி மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜூலை 10-ம் தேதி தனது 100-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இதனால் இந்த ஆண்டு முழுவதும் பல அதிரடி அறிவிப்புகளைத் தொடர்ந்து பென்ட்லி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக புது ரக எலெக்ட்ரிக் கார், செல்ஃப் ட்ரைவிங் கார், நீண்ட பயணங்களுக்கு ஏற்ற ஜிடி ரக கார் என வரிசையாகத் தனது அடுத்தக்கட்ட வெளியீடுகள் குறித்து அறிவித்துள்ளது.

மேலும், 2019-ம் ஆண்டு பென்ட்லி-க்கு மிகவும் ஸ்பெஷலான ஆண்டு என்பதால் தனது அடையாளமான முல்சேன் ரக காரின் ஸ்பெஷல் எடிஷனாக 100 கார்களை மட்டும் உற்பத்தி செய்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இது பென்ட்லி நிறுவனரைக் கவுரப்படுத்தும் வகையிலும் சொகுசு கார்கள் பிரியர்களைக் கவரும் வகையிலும் வெளியிடப்பட உள்ளது.


பென்ட்லி 100 ஜிடி ரக கார் வருகிற 2035-ம் ஆண்டு விற்பனைக்கு வர உள்ளது. இந்தக் கார் சொகுசு கார்களின் வரிசையில் மிகவும் உயர்ந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 4 எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் 1,500 Nm டார்க் வெளியீடு கொண்டிருக்கும். 2.5 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தில் சீறும் பென்ட்லி EXP 100 GT காரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 300 கி.மீ ஆகும்.

 மேலும் பார்க்க: ஹூண்டாய் கோனாவை கொடியசைத்துத் துவக்கி வைத்த தமிழக முதல்வர்..!
First published: July 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...