மூன்று மாதத்துக்கு ஒரு புது மாடல்... இந்திய சந்தையைக் கைப்பற்றும் முயற்சியில் Audi..!

”சமீபத்தில் வெளியான ஆடி செடான் A6 காரின் எட்டாம் தலைமுறைக் காரை அறிமுகம் செய்தது”

மூன்று மாதத்துக்கு ஒரு புது மாடல்... இந்திய சந்தையைக் கைப்பற்றும் முயற்சியில் Audi..!
ஆடி A6 (மாதிரிப்படம்)
  • News18
  • Last Updated: October 25, 2019, 5:44 PM IST
  • Share this:
ஆடி கார் நிறுவனம் இந்திய சந்தையில் இனி மூன்று மாதத்துக்கு ஒரு புது மாடல் என களம் இறக்க உள்ளது.

ஜெர்மன் கார் நிறுவனமான ஆடி கார் நிறுவனம் இந்திய சந்தையில் தனக்கான முத்திரையை மீண்டும் பதிக்கத் தயாராகி வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஆடி கார் நிறுவனத்துக்கு அதிகப்படியான போட்டி எழுந்ததால் சற்று சரிந்துள்ளது. சமீபத்தில் வெளியான ஆடி செடான் A6 காரின் எட்டாம் தலைமுறைக் காரை அறிமுகம் செய்தது.

இந்த வெளியீட்டு விழாவில் பேசிய ஆடி இந்தியா தலைவர் பல்பீர் சிங் தில்லான், “ஆட்டோமொபைல் துறைக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்கக் கோரி அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ப்ரீமியம் கார்கள் வரிசையில் ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் மூன்றாம் இடத்தில் உள்ளது.


அடுத்த ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு புதுவித மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். மீண்டும் இந்திய சந்தையில் முதலிடத்தை பிடிப்போம். BS-VI விதிமுறைகளை நடைமுறைப்படுத்த கடுமையான முயற்சிகளை செலுத்தி வருகிறோம்” என்றுள்ளார்.

மேலும் பார்க்க: புதிய வெற்றிக்காக மாருதி சுசூகி உடன் இணையும் டொயோட்டா!

மாமல்லபுரம் சந்திப்பின் போது சிறப்பான ஏற்பாடு... பிரதமர் பாராட்டு
First published: October 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading