இந்தியாவுக்கு 100 கார்கள் மட்டுமே...! AUDI-யின் புதிய சொகுசுக் கார்

Audi Q7 Black Edition | ஆடி-யுடன் இருங்கள் என்ற பெயரில் திருவிழா காலத்தை ஆடி நிறுவனம் தொடங்கியுள்ளது

news18
Updated: September 12, 2019, 9:48 AM IST
இந்தியாவுக்கு 100 கார்கள் மட்டுமே...! AUDI-யின் புதிய சொகுசுக் கார்
ஆடி (மாதிரிப்படம்)
news18
Updated: September 12, 2019, 9:48 AM IST
AUDI நிறுவனம், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், புதிய ரக சொகுசு காரை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, சொகுசு கார் சந்தையில் முன்னிலையில் உள்ளது. ஆடி கார்களை வைத்திருப்பதே செல்வந்தர்கள் மத்தியில் கவுரவமாக பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆடி கியூ7 மாடலுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், கியூ7 மாடலில் கறுப்பு நிற காரை ஆடி நிறுவனம் நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி செயல்பட விரும்பும் வாடிக்கையாளர்களுக்காகவே இந்த மாடலை வெளியிட்டுள்ளதாக ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் பல்பிர் சிங் தில்லான் தெரிவித்தார்.


இதன் தொடக்க விலை 82 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய். இந்தியாவில் 100 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரின் வெளிப்பகுதி உயர்தரமானது. பல்வேறு அமைப்புகள் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ரேடியேட்டர் கிரில் ஃபிரேம், கதவைச் சுற்றியுள்ள பகுதிகள், டைட்டன் கருப்பு கண்ணாடியால் பொருத்தப்பட்டுள்ளன. பக்கவாட்டு கதவுகள், மேல் பகுதிகள், சக்கரங்கள் ஆகியவை கறுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த காரை சொந்தமாக்கிக் கொள்வதில், சொகுசு கார் விரும்பிகள் மற்றும் ஆடி கார் வைத்திருப்பவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று பல்பிர் சிங் தில்லான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆடி-யுடன் இருங்கள் என்ற பெயரில் திருவிழா காலத்தை ஆடி நிறுவனம் தொடங்கியுள்ளது.

Loading...

First published: September 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...