1.69 விநாடிகளில் 100 கி.மீ வேகம்... அதிரும் விலையில் உலகின் அதிவேக கார்...!

வெறும் 10.6 விநாடிகளில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் சீறும் ஆஸ்பார்க் அவுல் காரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 400 கி.மீ ஆகும்.

1.69 விநாடிகளில் 100 கி.மீ வேகம்... அதிரும் விலையில் உலகின் அதிவேக கார்...!
ஆஸ்பார்க் அவுல்
  • News18
  • Last Updated: November 15, 2019, 4:04 PM IST
  • Share this:
உலகின் அதிவேக காரான ஆஸ்பார்க் அவுல் ஒரு ஹைப்பர் எலெக்ட்ரிக் காராக விற்பனைக்கு வெளியாகி உள்ளது.

உலகின் மிகவும் அதிவேக காரான ஆஸ்பார்க் அவுல் 100 கி.மீ வேகத்தை வெறும் 1.69 விநாடிகளில் கடந்துவிடும் திறன் கொண்டதாக உள்ளது. அதிவேகத் திறனுக்கு நான்கு சக்கரங்களுக்கு நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. 1,985 hp திறன் வெளியீட்டுக்கு டார் வெளியீடு என்பது 2000Nm ஆக உள்ளது.

வெறும் 10.6 விநாடிகளில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் சீறும் ஆஸ்பார்க் அவுல் காரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 400 கி.மீ ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 280 கி.மீ வரை பயணிக்க முடியும். 64 kWh லித்தியம் ஐயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் பெரிய பேட்டரியை விரைவில் பொருத்தி அப்டேட் செய்ய உள்ளதாகவும் இந்த ஜப்பான் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்தக் காரின் அத்தனை பேனல்களும் கார்பன் ஃபைபரால் வலுபடுத்தப்பட்ட ப்ளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வெறும் 50 கார்களை மட்டும் இந்நிறுவனம் தயாரித்துள்ளது. இந்திய மதிப்பில் இக்காரின் விலை 22 கோடி ரூபாய் மட்ட்மே.

மேலும் பார்க்க: இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்கள்... டாப் 10 பட்டியலில் 8 மாருதி சுசூகி கார்கள்..!
First published: November 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading