பதவி விலகப்போவதில்லை...! முடிவை மாற்றிக்கொண்ட ஆனந்த் மஹிந்திரா

குழுமத்தின் உறுப்பினர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதாலே மீண்டும் தலைவர் பதவியில் தொடர உள்ளதாக ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.

பதவி விலகப்போவதில்லை...! முடிவை மாற்றிக்கொண்ட ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா
  • News18
  • Last Updated: February 11, 2020, 1:28 PM IST
  • Share this:
மஹிந்திரா& மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் பதிவியில் தொடர்ந்து நீடிக்கப்போவதாக அந்நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆனந்த் மஹிந்திரா தலைவர் பதவியைவிட்டு விலகப்போவதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பின்னர் மஹிந்திரா நிறுவனத்தின் ஆலோசகர் பதவியை ஏற்க உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து மஹிந்திரா வெளியிட்டிருந்த அறிக்கையில், “நிர்வாகம் சாரா தலைவர் ஆக வருகிற 2020 ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆனந்த் மஹிந்திரா பதவி ஏற்பார். செபி விதிமுறையின் அடிப்படையிலேயே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.


தற்போது குழுமத்தின் உறுப்பினர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதாலே மீண்டும் தலைவர் பதவியில் தொடர உள்ளதாக ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். புதிய அறிவிப்பின் அடிப்படையில் வரும் 2021 நவம்பர் 11-ம் தேதி வரையில் ஆனந்த் மஹிந்திரா பதவி வகிக்க பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

மேலும் பார்க்க: 25 லட்சமாவது வாகனத்தை வெளியீட்டு சாதனை படைத்த மஹிந்திரா!
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading