புத்தம்புதுப் பொலிவுடன் எஸ்யூவி மாடல்களுக்குப் போட்டியாக ஹூண்டாய் க்ரெட்டா அறிமுகம்!

மேம்படுத்தப்பட்ட ப்ளூ லிங்க் தொழில்நுட்பம், டிஜிட்டல் டிஸ்ப்ளே, 8 ஸ்பீக்கர்கள் கொண்ட பாஸ் சவுண்ட் சிஸ்டம் என அப்டேட் ஆகியுள்ளது க்ரெட்டா.

புத்தம்புதுப் பொலிவுடன் எஸ்யூவி மாடல்களுக்குப் போட்டியாக ஹூண்டாய் க்ரெட்டா அறிமுகம்!
புது ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி
  • News18
  • Last Updated: March 16, 2020, 8:59 PM IST
  • Share this:
அனைத்து டாப் மாடல் எஸ்யூவி கார்களுக்கும் போட்டியாக புத்தம்புது பொலிவுடன் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி இன்று அறிமுகம் ஆகியுள்ளது.

தொடக்க விலையாக 9.99 லட்சம் ரூபாய்க்கு இப்புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி அறிமுகம் ஆகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ரகங்களிலுமே இக்கார் விற்பனைக்கு வந்துள்ளது. கூடுதலாக 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ரகமும் உள்ளது. டர்போ பெட்ரோல் என்ஜின் ரக கார் மட்டும் 16.16 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது.

வெளிப்புறத் தோற்றம் அசத்தல் அப்டேட் பெற்றுள்ளது. புது க்ரில், புதிய அலாய் சக்கரங்கள், நவீன கேபின் வசதிகள் என அத்தனை வகையிலும் கவர்கிறது புதிய ஹூண்டாய் க்ரெட்டா. கூடுதலாக 10 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மேம்படுத்தப்பட்ட ப்ளூ லிங்க் தொழில்நுட்பம், டிஜிட்டல் டிஸ்ப்ளே, 8 ஸ்பீக்கர்கள் கொண்ட பாஸ் சவுண்ட் சிஸ்டம் என அப்டேட் ஆகியுள்ளது க்ரெட்டா.


6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் சிறப்பம்சமாகும். ஈகோ, கம்ஃபர்ட் மற்றும் ஸ்போர்ட் என மூன்று ட்ரைவிங் மோட் கொடுக்கப்பட்டுள்ளன. பனி, மணல், சகதி என மூன்று ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் மோட் உள்ளன. கியா செல்டாஸ், எம்ஜி ஹெக்டார் போன்ற எஸ்யூவி ஆதிக்கக்காரர்களை வீழ்ததவே அப்டேட் ஆன க்ரெட்டா எஸ்யூவி காரை ஹூண்டாய் வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும் பார்க்க: இதேபோன்ற ’Work from Home’ காலகட்டத்தில்தான் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தார் நியூட்டன்..!
First published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading