இந்தியாவின் டாப் 10 கார்கள் பட்டியலில் 8 இடங்களில் மாருதி சுசூகி!

10 இடங்களில் மாருதி சுசூகி 8 இடங்களைப் பெற்றுள்ள நிலையில் மீதுள்ள இரண்டு இடங்களை ஹூண்டாய் நிறுவன கார்கள் பெற்றுள்ளன.

இந்தியாவின் டாப் 10 கார்கள் பட்டியலில் 8 இடங்களில் மாருதி சுசூகி!
WagonR. (Photo: Abhinav Jakhar/News18.com)
  • News18
  • Last Updated: June 24, 2019, 7:54 PM IST
  • Share this:
இந்தியாவின் டாப் 10 கார்கள் பட்டியலில் 8 இடங்களில் மாருதி சுசூகியின் கார்களே இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் பேசஞ்சர் வாகனங்களில் அதிகம் விரும்பி வாங்கப்படும் டாப் 10 கார்களின் பட்டியலை SIAM (இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம்) வெளியிட்டுள்ளது. 10-ல் 8 இடங்களை மாருதி சுசூகியின் கார்களே பிடித்துள்ளன. மாருதி சுசூகி நிறுவனத்திலேயே அதிகம் விற்பனையான காராக Swift உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தியாவில் 17,039 Swift கார்கள் விற்பனை ஆகியுள்ளன.

இரண்டாம் இடத்தில் மாருதி சுசூகியின் ஆல்டோ உள்ளது. கடந்த மாதம் மட்டும் 16,394 ஆல்டோ கார்கள் விற்பனை ஆகியுள்ளன. மூன்றாம் இடத்தை டிசைர் பெற்றுள்ளது. டிசைர் கடந்த ஒரு மாதத்தில் 16,196 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.


10 இடங்களில் மாருதி சுசூகி 8 இடங்களைப் பெற்றுள்ள நிலையில் மீதுள்ள இரண்டு இடங்களை ஹூண்டாய் நிறுவன கார்கள் பெற்றுள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா 7-ம் இடத்திலும் எலைட் i20 எட்டாம் இடத்திலும் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டைவிட 2019-ம் ஆண்டில் வாகன விற்பனை கடுமையான சரிவை சந்தித்துள்ளதாகவும் SIAM குறிப்பிட்டுள்ளது.

மேலும் பார்க்க: எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரியைக் குறைக்க வாய்ப்பு- ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை
First published: June 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading