20 ஆண்டுகளில் சாதனை... 30 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ள சென்னை ஹுண்டாய் தொழிற்சாலை

20 ஆண்டுகளில் 88 நாடுகளுக்கு 30 லட்சம் கார்களை ஏற்றுமதி

20 ஆண்டுகளில் சாதனை... 30 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ள சென்னை ஹுண்டாய் தொழிற்சாலை
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: January 31, 2020, 8:20 AM IST
  • Share this:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலை நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளில் 88 நாடுகளுக்கு 30 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.எஸ். கிம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக் கோட்டை தொழிற்பேட்டையில் ஆரம்பிக்கப்பட்ட ஹூண்டாய் கார் நிறுவனம் கடந்த 1999-ம் ஆண்டு முதல் கார்களை ஏற்றுமதி செய்ய தொடங்கியது.

இந்தியாவிலிருந்து லத்தீன் அமெரிக்கா 33 நாடுகள், ஆப்பிரிக்கா 28 நாடுகள், ஆசிய பசிபிக் 26 நாடுகள் ஐரோப்பா 1 நாடு, என நான்கு கண்டங்களில் உள்ளி 88 நாடுகளுக்கு ஹூண்டாய் கார் தொழிற்சாலை ஏற்றுமதி செய்து வருகிறது.


கடந்த 1999-ம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளில் ஒரு லட்சம் கார்களை ஏற்றுமதி செய்யும் முதல் மைல்கல்லை எட்டியது. 2008ல் 5 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்தது அதன்பிறகு 2010 ல் 10 லட்சம் கால்களையும் 2014இல் 20 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்தது.

ஆட்டோமொபைல் துறையில் தொய்வு ஏற்பட்டு இருந்த நிலையிலும் ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் 2020-ம் ஆண்டு தனது 30 லட்சம் ஆவது காரை உற்பத்தி செய்து அறிமுகம் செய்துவைத்து கொலம்பியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது சிறந்த மைல்கல்லாக விளங்கியுள்ளது.

ஹூண்டாய் கார் நிறுவனத்தில் கொலம்பியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் 30 லட்சமாவது காரை அறிமுகம் செய்யும் விழா தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.விழாவில் ஹூண்டாய் கார் தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எஸ். எஸ். கிம் கலந்துகொண்டு காரை அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் 10 ட்ரெண்ட் செட்டிங் மாடல் கார்களை ஹூண்டாய் நிறுவனம் ஏற்றுமதி செய்து வருவதாகவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையில் தயாரிக்கப்பட்டுள்ள மின்சாரக் கார் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அனைத்து மக்களும் வாங்க கூடிய விலையில் விற்பனைக்கு வரை உள்ளதாகும் தெரிவித்தார்.

விழாவில் ஹூண்டாய் கார் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளும், பல்வேறு நாடுகளிலிருந்து வந்த கார் விற்பனையாளர்களும், பணியாளர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

 
First published: January 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading