நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு நடுவே டெஸ்ட் ட்ரைவ்-ல் தென்பட்ட மஹிந்திரா தார் 2020..!

MID யூனிட் பொருத்தப்பட்டு ஆடியோ மற்றும் ஃபோன் கண்ட்ரோல் அம்சத்துடன் ஸ்டியரிங் வீல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: July 22, 2019, 12:41 PM IST
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு நடுவே டெஸ்ட் ட்ரைவ்-ல் தென்பட்ட மஹிந்திரா தார் 2020..!
தார் 2020
Web Desk | news18
Updated: July 22, 2019, 12:41 PM IST
மஹிந்திரா தார் 2020 அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் வேளையில் தென் இந்தியாவில் அடிக்கடி டெஸ் ட்ரைவில் ஈடுபட்டு வருகிறது தார் 2020.

மஹிந்திரா தார் புதிய பதிப்பு அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என தார் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து பல கட்ட டெஸ் ட்ரைவ் சோதனையில் தார் 2020 ஈடுபட்டு வருகிறது. சமீபத்திய தார் 2020 டெஸ் ட்ரைவ் ஆன்லைனில் வைரலாகி வருகிறது.

வில்லிஸ் CJ5 என்னும் ஜீப் ரக வாகனத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய தார் 2020 வடிவமைக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தார் 2020-ன் முன்புறத் தோற்றம் ஜீப் ரேங்கலரின் தோற்றத்தை ஒத்தே இருக்கிறது. மிகவும் ஸ்போர்ட்டி தோற்றத்தில் புதிய தார் 2020 காணப்படுகிறது.


தோற்றங்கள் பழைய ஜீப் மாடல்களின் அடிப்படையில் இருந்தாலும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தார் 2020 அப்டேட் செய்யப்பட்டே வெளியாகும் எனக் கூறப்படுகிறது. டெஸ்ட் ட்ரைவ் வாகனத்தில் ரியர் பம்பர் இணைக்கபடவில்லை என்றாலும் வாகனம் விற்பனைக்கு வரும்போது இணைக்கப்பட்டிருக்கலாம்.

புதிய தார் 2020 புதிய கருப்பு நிற டேஷ்போர்டு கொண்டிருக்கலாம். க்ளோஸி தோற்றம், டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஸ்டியரிங்வீல் பட்டன் என அசத்தக் காத்திருக்கிறது. MID யூனிட் பொருத்தப்பட்டு ஆடியோ மற்றும் ஃபோன் கண்ட்ரோல் அம்சத்துடன் ஸ்டியரிங் வீல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: வணிக பயன்பாட்டு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே மானியம் - மத்திய அரசு விளக்கம்
First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...