7.69 லட்சம் ரூபாய்க்கு ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உடன் ஸ்மார்ட்ஃபோன் இணைக்கும் வசதி மற்றும் வாய்ஸ் கமாண்ட் ஆகிய சிறப்பம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

7.69 லட்சம் ரூபாய்க்கு ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்!
(Image source: Ford)
  • News18
  • Last Updated: June 6, 2019, 6:34 PM IST
  • Share this:
ஃபோர்டு நிறுவனத்தில் புதிய ஈகோஸ்போர்ட் 7.69 லட்சம் ரூபாய் விலையில் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

இதே காரின் Thunder Edition 10.18 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது. ஃபோர்டின் புதிய வரவு குறித்து ஃபோர்டு இந்தியா மேலாண்மை இயக்குநர் அனுராக் மல்ஹோத்ரா கூறுகையில், “குறைவான விலையில் கார் என்றாலும் தரமான தகுதிகளுடனும் அசத்தல் அம்சங்களுடனும் ஃபோர்டு தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்துவதைத் தொடரும்” என்றார்.

ஈகோ ஸ்போர்ட் Thunder Edition 17 இன்ச் கொண்ட அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு எலெக்ட்ரிக் மேற்கூரையுடன் அறிமுகமாகியுள்ளது. இந்த அம்சம் கடந்த ஆண்டே ஃபோர்டு காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


ஒரு ஸ்மார்ட் காராக அறிமுகமாகியுள்ள இந்த Thunder Edition-ல் 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் வசதி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உடன் ஸ்மார்ட்ஃபோன் இணைக்கும் வசதி மற்றும் வாய்ஸ் கமாண்ட் ஆகிய சிறப்பம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: தண்ணீர் பாட்டில் கூட காரில் தீ விபத்தை ஏற்படுத்தும்- வெயில் எச்சரிக்கை!
First published: June 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading