ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

கார் வேக்ஸ் vs கார் பாலிஷ் - இரண்டில் உங்கள் காருக்கு எது, எப்போது தேவை?

கார் வேக்ஸ் vs கார் பாலிஷ் - இரண்டில் உங்கள் காருக்கு எது, எப்போது தேவை?

ஒரு தனிநபர் தனது வாகனத்தை பிரகாசிக்க வைக்கும் முயற்சியில் கார் வேக்ஸ் மற்றும் கார் பாலிஷ் ஆகியவற்றை வேறுபடுத்தி பார்க்க வேண்டும். பாலிஷிங் என்பது ஒரு வகை பெயிண்ட் கரெக்ஷன் ப்ராசஸ் ஆகும்.

ஒரு தனிநபர் தனது வாகனத்தை பிரகாசிக்க வைக்கும் முயற்சியில் கார் வேக்ஸ் மற்றும் கார் பாலிஷ் ஆகியவற்றை வேறுபடுத்தி பார்க்க வேண்டும். பாலிஷிங் என்பது ஒரு வகை பெயிண்ட் கரெக்ஷன் ப்ராசஸ் ஆகும்.

ஒரு தனிநபர் தனது வாகனத்தை பிரகாசிக்க வைக்கும் முயற்சியில் கார் வேக்ஸ் மற்றும் கார் பாலிஷ் ஆகியவற்றை வேறுபடுத்தி பார்க்க வேண்டும். பாலிஷிங் என்பது ஒரு வகை பெயிண்ட் கரெக்ஷன் ப்ராசஸ் ஆகும்.

 • 2 minute read
 • Last Updated :

  கார் க்ளீன் மற்றும் கார் வாஷ் தொழில்களில் வேக்ஸ் (wax) மற்றும் பாலிஷ் (polish) ஆகிய இரண்டும் அடிக்கடி ஒன்றுக்கொன்று மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு தனிநபர் தனது வாகனத்தை பிரகாசிக்க வைக்கும் முயற்சியில் கார் வேக்ஸ் மற்றும் கார் பாலிஷ் ஆகியவற்றை வேறுபடுத்தி பார்க்க வேண்டும். பாலிஷிங் என்பது ஒரு வகை பெயிண்ட் கரெக்ஷன் ப்ராசஸ் ஆகும்.

  இது உங்கள் வாகனத்தில் காணப்படும் மேற்பரப்பு குறைபாடுகளை (surface flaws) நீக்குகிறது அதுவே வேக்ஸிங் என்பது ஒரு காரின் பெயிண்ட் மேல் ப்ரொடக்ட்டிவ் கோட்டிங் (protective coating) போடும் செயல் முறையாகும். வேக்ஸிங் என்பது உங்கள் காரின் பாடிஷெல் மீது பாதுகாப்பு அடுக்கு பூச்சுகளை உருவாக்குகிறது.

  கார் பாலிஷ் vs கார் வேக்ஸ்.. வித்தியாசம் என்ன.?

  ஒருவர் தன் கார் மீதான ஆர்வம் மற்றும் அன்பை காட்ட எளிதான வழிகளில் ஒன்று, அதை சுத்தமாகவும் பளபளப்பாகவும் வைத்திருப்பது. கார் பாலிஷ் மற்றும் கார் வேக்ஸ் என 2 வழிகளைகள் இதை செய்தாலும் இரண்டும் ஒன்றல்ல.

  கார் பாலிஷ்: காரின் பெயிண்ட் அழுக்கு மற்றும் சிறிய மற்றும் பெரிய கீறல் அடையாளங்கள் கூட இல்லாமல் செய்ய மற்ற க்ளன்ஸிங் ஏஜெண்ட்ஸ்களுடன் பாலிஷ் பயன்படுத்தப்படுகிறது. சிறிய துருப்பிடித்த புள்ளிகளை அகற்றவும் இதைப் பயன்படுத்தலாம். சுருக்கமாக சொன்னால் சிறிய கீறல்கள் மற்றும் பிற கறைகளை நீக்குகிறது.  ஒரு காரின் பெயிண்ட் டல்லாகி விட்டால் அல்லது ஆக்சிடேஷன்காரணமாக அதன் பளபளப்பை இழந்தால் பாலிஷ் பயன்படுத்தப்படுகிறது. பாலிஷ் வழக்கமான அடிப்படையில் பரிந்துரைக்கப்படுவதில்லை, ஏனெனில் அதன் சிராய்ப்பு பண்புகள் கார் பாடியின் மேற்பரப்பை பாதிக்கலாம் என்பதால்.

  ALSO READ |  புதிய எலக்ட்ரிக் பிக்கப் டிரக் – EV பிரிவில் டொயோட்டாவின் அறிமுகம்

  கார் வேக்ஸ்: கார்களில் பயன்படுத்தும் வேக்ஸ் என்பது உராய்வில்லாத மெழுகு வகை. பெரும்பாலும், இது காரை வாஷ் செய்து பாலிஷ் செய்த பிறகு பயன்படுத்தப்படுகிறது. ஒரு கார் வேக்ஸின் அடிப்படை செயல்பாடு பெயிண்ட்டிற்கு ஒரு பாதுகாப்பு பூச்சு வழங்குவதோடு அதன் பிரகாசத்தையும் பெருக்குவதாகும். கார் வேக்ஸ் நெயில் பாலிஷை போலவே செயல்படுகிறது. பயன்படுத்திய பிறகு, கார் வேக்ஸ் காரின் மீது வேக்ஸின் ப்ரொட்டக்டிவ் கோடிங்கை விட்டுச் செல்கிறது. பெரும்பாலான வேக்ஸ்களில் இப்போது புற ஊதா தடுப்பான்கள் (UV inhibitors) உள்ளன. இவை வேக்ஸின் பாதுகாப்பு குணங்களை அதிகரித்து சூரியனின் கதிர்களில் இருந்து பெயிண்ட்களை பாதுகாக்கின்றன.

  எப்போது வேக்ஸ் அல்லது பாலிஷ் செய்ய வேண்டும்.?

  முதலில் உங்களுக்கு இருக்கும் தேவையை பொறுத்தே மெர்லனும் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். மேலே பார்த்தபடி கார் வேக்ஸ் உங்கள் காரை முழுவதுமாக சுத்தம் செய்த பிறகு அதற்கு நல்ல பளபளப்பை கொடுக்க பயன்படுத்தப்படுகிறது. பளபளப்பை பராமரிப்பது மட்டுமல்லாமல், பெயிண்டிற்கு சேதம் ஏற்படுவதை தடுக்கிறது. உங்கள் காரை வேக்ஸ் அல்லது பாலிஷ் செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் முன், அது கார் சுத்தமாக மற்றும் உலர்ந்ததாகவும் இருப்பதை உறுதி செய்யவும். பின் விரல் நுனி கொண்டு பெயிண்ட் மேல் மெதுவாக தடவில் பாருங்கள். கடினமான திட்டுகள் அல்லது உயர்த்தப்பட்ட துகள்களை உணர முடிகிறதா என்று டெஸ்ட் செய்யுங்கள்.

  ALSO READ |  டீ குடிக்கும் கேப்பில் EV டூவீலரை சார்ஜ் செய்யலாம் - Log 9 மெட்டீரியல்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்த Hero Electric!

  மேற்பரப்பு மென்மையாக இருந்தால் உற்பத்தியாளரின் பரிந்துரைகளின் படி நீங்கள் வேக்ஸ் தடவி காரை வாஷ் செய்யலாம். ஆனால் மேற்பரப்பில் சிறிய புடைப்புகள் அல்லது அசாதாரண மாற்றங்களை நீங்கள் கவனித்தால், பிரச்சனை மேற்பரப்பிற்கு அடியில் உள்ளது. எனவே வேக்ஸ் பயன்படுத்தும் முன் காரை பாலிஷிங் செய்ய வேண்டும்.

  First published: