• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் மாருதி சுசுகி - அக்டோபரில் கடும் வீழ்ச்சி!

தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் மாருதி சுசுகி - அக்டோபரில் கடும் வீழ்ச்சி!

மாருதி சுசுகி

மாருதி சுசுகி

ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ உள்ளிட்ட மினி கார்களின் விற்பனை, கடந்த ஆண்டு இதே மாதத்தில் 28,462 ஆக இருந்த நிலையில், 23 சதவீதம் சரிந்து 21,831 ஆக சரிந்து இருக்கிறது.

  • Share this:
மாருதி சுசுகி நிறுவனத்தின் வாகன விற்பனை அக்டோபர் மாதத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

அக்டோபர் மாதம் முடிந்து நவம்பர் மாதம் தொடங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு நிறுவனங்களும் தனது வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு வருகின்றனர். மாருதி சுசுகியின் ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோவை உள்ளடக்கிய மினி கார்கள், கடந்த ஆண்டு இதே மாதத்தில் 28,462 ஆக இருந்த நிலையில், 23 சதவீதம் சரிந்து 21,831 ஆக மாறி இருக்கிறது.

இதேபோல ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசையர் போன்ற மாடல்கள் உள்ளிட்ட சிறிய கார் பிரிவுகளின் விற்பனை, கடந்த ஆண்டு அக்டோபரில் 95,067 கார்களில் இருந்தது. தற்போது 49 சதவீதம் சரிந்து 48,690 ஆக மாறியுள்ளது. அக்டோபர் மாதத்தில் விற்பனை 24 சதவீதம் சரிந்து 1,38,335 ஆக குறைந்து இருக்கிறது. இந்த செய்தி வாகன துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘எலக்ட்ரானிக் உதிரிபாகங்களின் பற்றாக்குறை வாகனங்களின் உற்பத்தியை தொடர்ந்து பாதித்துள்ளது. இந்த பாதிப்பைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதன்படி இந்த மாத தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட விற்பனை அளவை விட அதிகமான வாகனங்களை நிறுவனம் மாருதி சுசூகி விற்பனை செய்துள்ளது’ என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ உள்ளிட்ட மினி கார்களின் விற்பனை, கடந்த ஆண்டு இதே மாதத்தில் 28,462 ஆக இருந்த நிலையில், 23 சதவீதம் சரிந்து 21,831 ஆக சரிந்து இருக்கிறது. அக்டோபர் 2020 இல் 1,422 யூனிட்களுடன் ஒப்பிடும்போது நடுத்தர அளவிலான செடான் சியாஸின் விற்பனை, இப்போது 25 சதவீதம் குறைந்து 1,069 யூனிட்டுகளாக உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனத்துக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதால், மற்ற நிறுவனங்களும் அக்டோபர் மாதத்தில் வீழ்ச்சியையே சந்தித்திருக்கும் என்று தெரிகிறது.

செமிகண்டக்டர்களுக்கான பற்றாக்குறை நீடிப்பதால் அடுத்து வரும் நாட்களிலும் வாகன உற்பத்தியும் விற்பனையும் வீழ்ச்சிப் பாதையில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே செமி கண்டக்டர் பற்றாக்குறையினாலே டாட்டா நிறுவனத்தின் விற்பனை பாதிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, கார்களின் விலை உயர்வு எனப் பல காரணிகள் செப்டம்பர் காலாண்டில் விற்பனை அளவீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Also read... Bajaj Vs EV Startups: கொளுத்தி போட்ட பஜாஜ் - பதிலடி கொடுக்கும் ஓலா, ஏதர் நிறுவனங்கள்!

2021 செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவனம் மொத்தமாக 86,380 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால், 2020 செப்டம்பர் மாதத்தில் 1,60,442 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 46.16 சதவீத வீழ்ச்சியை கண்டிருக்கிறது.

இருப்பினும் விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்-கிராஸ் மற்றும் எர்டிகா உள்ளிட்ட பயன்பாட்டு வாகன விற்பனை, முந்தைய ஆண்டின் 25,396 வாகனங்களுடன் ஒப்பிடும்போது, ​​7 சதவீதம் உயர்ந்து 27,081 ஆக உள்ளது என்று ‘எம்எஸ்ஐ’ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 9,586 யூனிட்களாக இருந்த ஏற்றுமதி இரண்டு மடங்கு அதிகரித்து 21,322 யூனிட்களாக இருந்தது என்றும் மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: