தொடர் வீழ்ச்சியில் இந்தியக் கார் விற்பனை- ஏற்றுமதியிலும் சரிவு!

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தைவிட 2019 ஜூன் மாதத்தில் வாகன விற்பனை 11% வீழ்ந்து வெறும் 3,076 வாகனங்களே விற்பனை ஆகியுள்ளன.

தொடர் வீழ்ச்சியில் இந்தியக் கார் விற்பனை- ஏற்றுமதியிலும் சரிவு!
மாதிரிப்படம் (Photo: Reuters)
  • News18
  • Last Updated: July 2, 2019, 12:04 PM IST
  • Share this:
தொடர்ச்சியாக ஜூன் மாதத்திலும் இந்திய கார் விற்பனைச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் நிறுவனங்களில் இந்திய ஜாம்பவானாகத் திகழும் மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ச்சியாக நான்கு மாதங்களாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் மாருதியின் விற்பனை 15 சதவிகிதம் வீழ்ந்து 1,14,861 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. இது கடந்த ஆண்டைவிட பெரும் வீழ்ச்சி என்கிறது மாருதி சுசூகி.

மாருதி சுசூகியின் வேகன் ஆர், சிஃபிட், பலேனோ மற்றும் டிசைர் ஆகிய வாகனங்கள் 12 சதவிகித விழ்ச்சியும் எர்டிகா மற்றும் ப்ரெஸ்சா ஆகிய வாகனங்கள் 8 சதவிகித வீழ்ச்சியும் சந்தித்துள்ளன. இதேபோல் டொயோட்டோ நிறுவனம் 19 சதவிகித வீழ்ச்சியும் மஹிந்திரா 6 சதவித வீழ்ச்சியையும் சந்தித்துள்ளன.


உள்ளூர் சந்தையைப் பொறுத்த வரையில் மே மாதத்தைவிட ஜூன் மாதத்தில் வாகன விற்பனை 5 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஏற்றுமதி சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தைவிட 2019 ஜூன் மாதத்தில் வாகன விற்பனை 11% வீழ்ந்து வெறும் 3,076 வாகனங்களே விற்பனை ஆகியுள்ளன.

மேலும் பார்க்க: இந்தியாவின் டாப் 10 கார்கள் பட்டியலில் 8 இடங்களில் மாருதி சுசூகி!
First published: July 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்