Home /News /automobile /

கார் பராமரிப்புக்கு மாதம் ரூ.200 மற்றும் பல அசத்தல் சலுகைகளை அறிவித்த GoMechanic

கார் பராமரிப்புக்கு மாதம் ரூ.200 மற்றும் பல அசத்தல் சலுகைகளை அறிவித்த GoMechanic

GoMechanic

GoMechanic

இந்தத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் வாகனங்கள் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.

  ஆட்டோமோட்டிவ் ஸ்டார்ட்அப் நிறுவனமான கோமெக்கானிக் (GoMechanic) கடந்த செவ்வாயன்று, நாட்டில் வாங்க கிடைக்கும் அனைத்து கார் பிராண்டுகள் மற்றும் மாடல்களுக்கான எக்ஸ்டென்டட் வாரண்டி பேக்கேஜ்களை வெறும் ரூ.200 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. கோமெக்கானிக் நிறுவனம் அறிவித்துள்ள இந்த வாரன்டி ரேன்ஜ் ஆனது ஐந்து வகையான தொகுப்புகளின் கீழ் வழங்கப்படுகிறது. அது அங்கீகரிக்கப்பட்ட உத்தரவாதம் (Authorised Warranty), சஸ்பென்ஷன் கவர் (Suspension Cover), 360 டிகிரி பாதுகாப்பு (360-degree Protection), எஞ்சின் உத்தரவாதம் (Engine Warranty) மற்றும் பிரேக் உத்தரவாதம் (Brake Warranty).

  டெல்லி, ஹைதராபாத், சென்னை, மும்பை, புனே, கொல்கத்தா, பெங்களூர், டேராடூன், கான்பூர், ஆக்ரா, அமிர்தசரஸ், போபால், கோயம்புத்தூர், மீரட், உட்பட மற்ற சில நகரங்கள் என கிட்டதட்ட நாடு முழுவதும் உள்ள 60 க்கும் மேற்பட்ட டயர்-1 மற்றும் டயர்-2 நகரங்களில் இந்தத் திட்டங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

  கோமெக்கானிக் வழங்கும் இந்த நீட்டிக்கப்பட்ட வாரண்டி பேக்கேஜ்கள், எஞ்சின், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்குகள் போன்ற வாகனத்தின் முக்கியமான அமைப்புகளுக்கும், பராமரிப்பு மற்றும் தேய்மானம் மற்றும் டியர் (tear) தொடர்பான சிக்கல்களுக்குமான தீர்வை வழங்குகிறது. மேற்குறிப்பிட்ட தொகுப்புகள் நுகர்பொருட்கள் மற்றும் தொழிலாளர் செலவுகளையும் உள்ளடக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், அவைகள் இலவச ரோட்ஸைட் அசிஸ்டென்ஸ் (Roadside Assistance - RSA) கவரேஜையும் உள்ளடக்கியது.

  இந்தத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் வாகனங்கள் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும், மேலும் ஒரு கார் தகுதி பெற்றால், எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் உத்தரவாதக் கவரேஜ் கிடைக்கும். வழங்கப்படும் உத்தரவாதமானது "நெகிழ்வானது" மற்றும் வருடாந்தர அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.999 என்கிற நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்துடன் அணுக கிடைக்கும்.

  Also Read : சும்மா தெறிக்கவிடும் அம்சங்கள்! சோனி நிறுவனத்தின் அதி நவீன எலக்ட்ரிக் கார்

  தங்கள் சேவைகள் இன்றைய நாட்களில் கிடைக்கும் பெரும்பாலான புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதங்களைத் தாண்டியதாக இருக்கும் என்று கோமெக்கானிக் நிறுவனம் கூறுகிறது.

  "உற்பத்தியாளர்களிடமிருந்து உத்தரவாதத்தை வாங்கிய 70% கார் உரிமையாளர்கள், சேவையில் உள்ளடக்கப்படாத காரணத்தால் பெரும்பாலான பகுதிகளுக்கு உத்தரவாத்தை பயன்படுத்த முடியவில்லை. எங்கள் சேவைக் குழுக்கள், எங்கள் பயனர்களிடமிருந்து அமைதியான, நீண்ட கால கார் நன்மைகளை பெற்றுள்ளனர்" என்று கோமெக்கானிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆன ரிஷப் கர்வா கூறி உள்ளார்.

  நிறுவனத்தின் விரிவாக்கப்பட்ட உத்தரவாதத் தொகுப்புகளின் வரம்பைப் பற்றி அதிகமான மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக, கோமெக்கானிக் நிறுவனம் ஆனது அதன் 1000 க்கும் மேற்பட்ட வொர்க்ஷாப்களில் ஓரியன்டேஷன் மற்றும் சென்ஷேஷன் செயல்முறையை மேற்கொண்டுள்ளது. நிறுவனத்தின் ஆன்-கிரவுண்ட் ஸ்டாஃப்கள் 'சர்வீஸ் ப்ரெண்ட்ஸ்' என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் இந்தத் திட்டங்களின் நன்மைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.
  Published by:Vijay R
  First published:

  Tags: Automobile

  அடுத்த செய்தி