Home /News /automobile /

காரின் உட்பகுதி டாய்லெட் சீட்டை விட அசுத்தமானது - ஷாக்கிங் ரிப்போர்ட்!

காரின் உட்பகுதி டாய்லெட் சீட்டை விட அசுத்தமானது - ஷாக்கிங் ரிப்போர்ட்!

Car Dashboad

Car Dashboad

காரின் கியர்ஷிஃப்ட், டேஷ்போர்டு மற்றும் பின் இருக்கை ஆகியவை பாக்டீரியாவால் அதிகப்படியாக மாசு அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் ஒருவரது வீட்டின் டாய்லெட் சீட்டில் படிந்துள்ள பாக்டீரியாக்களின் அளவிற்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம்

மேலும் படிக்கவும் ...
    காரின் கியர்ஷிஃப்ட், டேஷ்போர்டு, சீட் ஆகியவற்றில் இருக்கும் பாக்டீரியாக்கள் டாய்லெட் சீட்டில் இருப்பதை விட அதிக அளவிலான இருப்பதாக அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன.

    வீட்டின் டாய்லெட் சீட்டில் உள்ள பாக்டீரியாக்களை விட காரின் உட்புறம் அதிக அளவிலான பாக்டீரியாக்கள் இருப்பதாக இங்கிலாந்தின் பிரபல கல்லூரி நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நீங்கள் உங்கள் காரை மிகவும் நேசிப்பவர் என்றால், இந்த ஆய்வின் முடிவுகள் உங்களை அதிர்ச்சி அடையச் செய்யும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

    இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் உள்ள ஆஸ்டன் கல்லூரி நடத்திய ஆய்வின் அடிப்படையில், கார் டிக்கி, இருக்கைகள் ஆகியவை அதிகளவில் பாக்டீரியாவால் மாசுபட்ட இடமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பகுதிகள் பாக்டீரியா போன்ற பல நுண்ணுயிரிகளின் புகலிடம் என்றும் எச்சரித்துள்ளனர்.

    Also read:  எலெக்ட்ரிக் பைக்குகளை தவணை முறையில் எளிதாக வாங்கலாம் - Hero Electric நிறுவனத்தின் அட்டகாச திட்டம்.

    ஒப்பீட்டு இணைய தளமான ஸ்க்ராப் ஆட்டோமோட்டிவ் கம்பேரபிலிட்டி அறிக்கையின் படி, காரின் டிக்கிக்குள் 1,425 நுண்ணுயிரிகள் மற்றும் இருக்கையில் 649 வகையான பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காரின் கியர்ஷிஃப்ட், டேஷ்போர்டு மற்றும் பின் இருக்கை ஆகியவை பாக்டீரியாவால் அதிகப்படியாக மாசு அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் ஒருவரது வீட்டின் டாய்லெட் சீட்டில் படிந்துள்ள பாக்டீரியாக்களின் அளவிற்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

    ஆய்வின் படி, காரில் குறைந்த அளவில் மாசடையும் பகுதியாக ஸ்டீயரிங் வீல் உள்ளது தெரியவந்துள்ளது. காருக்கு முக்கியமான ஸ்டீயரிங் வீல்லில் 146 வகையான பாக்டீரியாக்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தோற்று காலத்தில் கைகளை சுத்தமாக பராமரிக்க மக்கள் அதிக அளவிலான சானிடைசர்களை பயன்படுத்தினர். அதனால் ஸ்டீயரிங் வீல் பகுதியில் பாக்டீரியா தொற்று குறைந்து காணப்படுவதாக தெரிகிறது.

    Also read:  வாகனம் ஓட்டுபவரா நீங்கள்.. இந்த போக்குவரத்து குறியீடுகள் மற்றும் அடையாளங்களை தெரிந்து கொள்ளுங்கள்

    விஞ்ஞானிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் காரின் உட்புறத்தில் ஆய்விற்கான மாதிரிகளை சேமித்த அனைத்து இடங்களிலும் மனித கழிவுகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. டிரைவர் சீட் பகுதியிலும் அந்த வகை பாக்டீரியா கிருமிகள் அதிக அளவில் இருந்துள்ளன.

    எனவே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்கலாம் அல்லது குறைந்தபட்சம் சாப்பிட்ட பிறகு சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்தலாம் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக தரை மற்றும் இருக்கையில் சிதறி விழும் உணவை எடுத்துச் சாப்பிட கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.

    இதையும் படியுங்கள் :  முதல் முறையா கார் வாங்கியிருக்கீங்களா?... பயனுள்ள பராமரிப்பு டிப்ஸ்கள் இதோ...

    இதேபோல், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற புதிய தயாரிப்புகளை கார் டீக்கில் எடுத்துச் சென்றால், குறிப்பாக பேக் செய்யாமல் அப்படியே எடுத்துச் செல்லும் பட்சத்தில் சாப்பிடுவதற்கு முன் நன்கு சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். நாளடைவில் பாக்டீரியாக்கள் பெருகுவதைத் தவிர்க்க காரைத் தொடர்ந்து சுத்தம் செய்வதும் புத்திசாலித்தனம் ஆகும்.

    ஆஸ்டன் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்விற்காக பல வகையான கார்களின் உட்புறத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்துள்ளனர். உதாரணமாக பியூஜியோட் 307-SW, VW கோல்ஃப், ஃபோர்டு ஃபோகஸ், ஹோண்டா ஜாஸ் மற்றும் ஒரு பியூஜியோட் என பல கார்களில் இருந்தும் எடுக்கப்பட்ட மாதிரிகளை வைத்தே பாக்டீரியாவின் அளவை கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Arun
    First published:

    Tags: Automobile

    அடுத்த செய்தி