• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • மின்சார வாகனம் வாங்கப்போறீங்களா? உங்களுக்கு ஓர் ஹேப்பியான தகவல்

மின்சார வாகனம் வாங்கப்போறீங்களா? உங்களுக்கு ஓர் ஹேப்பியான தகவல்

மின்சார வாகனம்

மின்சார வாகனம்

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாற்றுத் தீர்வாக மின்சார வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  • Share this:
    மின்சார வாகனங்களுக்கு பதிவுச் சான்றிதழ் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளது.

    இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மின்சார வாகனங்களுக்கு பதிவுச் சான்றிதழ், அதை புதுப்பிப்பதற்கான கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களின் புதிய பதிவுக்கான கட்டணத்தில் இருந்தும் விலக்கு அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.  மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தினசரிப் போக்குவரத்துக்கு சொந்த வாகனத்தைப் பயன்படுத்துவோர், மாற்றுத் தீர்வாக மின்சார வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் மின்சார வாகனங்களை விரைவாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும், உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு ‘எஃப்எம்இ-2’ என்ற திட்டத்தைக் கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

    அந்த திட்டத்தின்கீழ் இருசக்கர மின்சார வாகனங்களை வாங்குவோருக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை கிலோவாட் ஒன்றுக்கு 10 ஆயிரத்தில் ரூபாயல் இருந்து, 15 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து, கடந்த ஜூன் 11ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. அதன்படி, மின்சார வாகனத்தின் விலையில் அதிகபட்சம் 40 சதவீதம் வரை ஊக்கத்தொகையாகப் பெறலாம்.

    Must Read : ஜியோவுடன் கூட்டு சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனம்: அதிநவீன கார்களை தயாரிக்க இலக்கு!

    அத்துடன், ‘எஃப்எம்இ-2’ திட்டம் 2024 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புகள் காரணமாக மின்சார வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அன்படி தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதிவரையில் 13,668 இருசக்கர வாகனங்கள், 695 மூன்று சக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 14,366 மின்சார வாகனங்கள் மத்திய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், மின்சார வாகனங்களுக்கு பதிவுச் சான்றிதழ் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது இந்த வகை வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: