Home /News /automobile /

இவற்றில் எது ஜாகுவர், எது சிறுத்தை? குழம்பும் நெட்டிசன்கள்

இவற்றில் எது ஜாகுவர், எது சிறுத்தை? குழம்பும் நெட்டிசன்கள்

(Credit: twitter/Parveen Kaswan)

(Credit: twitter/Parveen Kaswan)

ஜாகுவாருக்கு மாறாக, நீச்சலடிக்க விரும்பும் மற்றும் அனகோண்டாக்களுக்கு கூட இரையாகும் , சிறுத்தைகள் தண்ணீரைத் தவிர்த்து, அதற்கு பதிலாக மான் மற்றும் பிற பாலூட்டிகளைத் தங்கள் இரையாக தேர்வு செய்கின்றன என்று அந்த அறிக்கை கூறுகிறது.

  • News18
  • Last Updated :
'வலியதுதான் உயிர்பிழைக்கும்' என்கிற சர்வைவால் ஆப் தி பிட் டஸ்ட்  (Survival of the fittest) என்ற விதியின் கீழ் வாழ்கிற உயிரினங்களில் முக்கியமானது ஜாகுவார் , சிறுத்தையும் தான். பதுங்குவது, பாய்வது, தாக்குவது, கொல்வது எனத் தனக்கென தனி சாம்ராஜ்யம் நடத்துகிற விலங்கினம் சிறுத்தை. பூனை இனங்களில் முக்கியமான விலங்கினம் சிறுத்தை. லெபர்ட், ஜாகுவார், சீட்டா, பூமா என நான்கு வகையில் இது இருக்கிறது. நான்கு உயிரினங்களும் உடலாலும் உருவத்தால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வித்தியாசங்களைக் கொண்டவை. 

உற்று நோக்கினால் மட்டுமே வித்தியாசங்களைக் காண முடியும். தோலில் உள்ள அடையாளங்கள், கால் மற்றும் உருவ அமைப்பு எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பது போல தோன்றும். ஆனால், உண்மையில் அவை ஒவ்வொன்றும் வேறு வேறு அடையாளங்கள் கொண்டவை. சர்வதேச ஜாகுவார் தினத்தை (International Jaguar Day) முன்னிட்டு, இந்திய வன அதிகாரி பர்வீன் கஸ்வான் (Parveen Kaswan) ட்விட்டரில் தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு மனதை கவரும் கேள்வி ஒன்றைக் கொண்டிருந்தார். 

மேற்சொன்ன அடையாளங்களை கொண்டு இரு வெவ்வேறு பூனை இனங்கள் ஒன்று போல் மற்றொன்று காட்சி அளித்துள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பற்றி உள்ளடக்கத்தை இப்போது காண்போம்.

கம்பீரமான பூனை குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளின் இரண்டு படங்களை வெளியிட்டு, கஸ்வான் தன்னை பின்தொடர்பவர்களிடம் இந்த படத்தில் எது ஜாகுவார், எது சிறுத்தை என்று கண்டுபிடிக்குமாறு கூறினார். படங்களை தலைப்பிட்டு, பர்வீன், "படத்தில் எது ஜாகுவார் & எது சிறுத்தை என்று எத்தனை பேரால் இதை சரியாக அடையாளம் காண முடியும் என்று பார்ப்போம் என்றார் அவர். இது #InternationalJaguarDay என்ற ஹேஷ்டேக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

சரியான பதிலை யூகிக்க நெட்டிசன்கள் நீண்ட நேரம் திணறியதால், இந்த ட்வீட்டிற்கு 6K லைக்குகளுக்கு மேல் கிடைத்தது. ஒரு பயனர் கருத்து தெரிவிக்கையில், "சிறுத்தை, ஜாகுவார், பாந்தர் மற்றும் சீட்டா ... நாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இந்த சந்தேகத்தையெல்லாம் ஒரே நேரத்தில் தீர்த்துக் கொள்வோம் என்றார்".

இது ஒரு தந்திரமான கேள்வி என்பதற்கான காரணம் என்னவென்றால், இந்த இரண்டு பெரிய பூனை இனங்கள், பதுங்கியிருந்து வேட்டையாட காத்திருக்கும் விதம் அவற்றின் உடல் மேல் இருக்கும் புள்ளிகள் மற்றும் மிகவும் ஒத்த தோற்றம் ஆகியவை தான். எனவே, பலர் இந்த இரண்டு இனங்களுக்கு மத்தியில் குழம்புகிறார்கள், சிலர் இரண்டும் ஒன்றே என்று நம்புகிறார்கள்.

இருப்பினும், ஒரு சிறிய ஆராய்ச்சி உங்களுக்கு உதவக்கூடும். ஜாகுவார் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்கிறது, அங்கு அவை மிகப்பெரிய பெரிய பூனை இனங்கள். இதற்கிடையில், சிறுத்தைகள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வாழ்கிறது. அவற்றின் வாழ்விடங்களில் மிகச்சிறிய பெரிய பூனை இனங்கள் இவைதான். நேஷனல் ஜியோகிராஃபிக் (National Geographic) படி, ஜாகுவார் சிறுத்தைகளை விட பெரியது. மேலும் இவை 79 கிலோ சிறுத்தைகளுடன் ஒப்பிடும்போது ஜாகுவார் 113 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும்.

Also read... Gold Rate | சவரனுக்கு ₹384‌ உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

ஐடஹோவை (Idaho) தளமாகக் கொண்ட ஒரு பெரிய பூனை இன ஆராய்ச்சியாளரான பூன் ஸ்மித்தின் (Boone Smith) கூற்றுப்படி, நேஷனல் ஜியோகிராஃபிக்கின் அறிக்கைகள் - ஜாகுவார் பெரிய தாடை தசைகள், பற்கள் மற்றும் மற்ற பெரிய பூனை இனங்களை விட வலுவான கடி சக்தியையும் கொண்டுள்ளது. போர்ட்லேண்ட் மிருகக்காட்சிசாலையின் இயக்குனர் டான் மூரை (Don Moore) மேற்கோள் காட்டி, ஜாகுவார் மற்றும் சிறுத்தைகள் வெவ்வேறு சூழல்களில் வாழ்கின்றன, இதனால் வெவ்வேறு இரையை சாப்பிடும் என்பதால் இவற்றின் தாடை மற்றும் உடல் அளவுகளில் மாறுபாடு இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

ஜாகுவாருக்கு மாறாக, நீச்சலடிக்க விரும்பும் மற்றும் அனகோண்டாக்களுக்கு கூட இரையாகும் , சிறுத்தைகள் தண்ணீரைத் தவிர்த்து, அதற்கு பதிலாக மான் மற்றும் பிற பாலூட்டிகளைத் தங்கள் இரையாக தேர்வு செய்கின்றன என்று அந்த அறிக்கை கூறுகிறது. இயற்கையின் படைப்பில் அனைத்துமே விந்தைதான். மேற்சொன்ன விலங்கினை போல் நம்மை சுற்றி, நமக்கு தெரிந்தும் தெரியாமலும் பல உயிரினங்கள், பல தாவரங்கள் ஒன்றை போல் மற்றொன்றும் ஒரே மாதிரியான மருத்துவக் குணங்களும் ஒரே மாதிரியான தீய குணங்களையும் கொண்டு நம்மிடையே வாழ்ந்து வருகிறது. இவற்றில் சரியானதை அடையாளம் காண்பதுதான் முக்கியம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Jaguar

அடுத்த செய்தி