சீனாவின் BYD நிறுவனம், தனது 3வது மாடலாக ‘Seal’ என்ற புதிய எலக்ட்ரிக் செடான் கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆல் வீல் டிரைவ் வசதி உள்ள இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று BYD நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் அடைந்துவிடும் அளவு திறன்கொண்டதாகும். இந்த கார் வரும் 2023 தீபாவளி முதல் விற்பனைக்கு வரும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
BYD seal எலக்ட்ரிக் கார் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள்:
BYD Seal எலக்ட்ரிக் கார் உலகளவில் ‘டெஸ்லா மாடல் 3’ காருடன் போட்டிபோடும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காரில் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் கிரிஸ்டல் LED ஹெட் லேம்ப், LED DRLS, இன்பினிட்டி LED டெயில் லைட் போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த காரில் CTB (Cell to Body) என்ற புதிய டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.
e Platform 3.0 கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரின் Drag Coefficient அளவு மிகவும் குறைவானதாகும். அதாவது வெறும் 0.219Cd மட்டுமே உள்ளது. இதில் மேலும் 50 : 50 என்ற விகிதத்தில் Axle Load டிஸ்ட்ரிபியூஷன் அளவு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Also Read : மாருதி நிறுவன கார்களின் விலை உயர்ந்தது..!
பேட்டரியின் சிறப்பம்சங்கள்:
வெளிநாடுகளில் இந்த e-Platform 3.0 பேட்டரி இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஒன்று 61.4KWH - லும் மற்றொன்று 82.5KWH . இதன் முதல் பேட்டரி ஆப்ஷன் (61.4KWH) 550 கிலோமீட்டர் ரேஞ்ச் மற்றும் பெரிய பேட்டரி (82.5KWH) ஆப்ஷன் 700 கிலோமீட்டர் ரேஞ்ச் அம்சங்களை கொண்டுள்ளது. பிரீமியம் எலக்ட்ரிக் செடான் கார் என்பதால் இதன் எக்ஸ் ஷோரூம் விலை 65 லட்சம் ரூபாய் முதல் 70 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் Kia EV6 மற்றும் BMW i4 ஆகிய எலக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக விளங்கும். சமீபத்தில் BYD நிறுவனம் வெளியிட்ட பிரீமியம் எலக்ட்ரிக் SUV காரான BYD ATTO 3 காரில் இப்போது ‘Forest Green’ என்று புதிய கலர் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாடல் இந்தியாவில் வெறும் 1,200 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் கூடுதலாக தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Car, China, Electric car, Electric Cars