• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • ஆல்டோ முதல் பிரெஸ்ஸா வரை... மாருதி சுசுகியின் அதிரடி ஆஃபர்கள்!

ஆல்டோ முதல் பிரெஸ்ஸா வரை... மாருதி சுசுகியின் அதிரடி ஆஃபர்கள்!

மாருதி

மாருதி

ஆல்டோ சி.என்.ஜி கார்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கார் விற்பனை சரிவை சந்தித்தாலும், அவற்றில் அதிகம் விற்பனையான கார்கள் பட்டியலில் இந்த பிராண்ட் இடம்பிடித்துள்ளது.

  • Share this:
பண்டிகை காலம் என்றாலே ஆட்டோமொபைல் துறையினர் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு ஆஃபர்களை வாரி வழங்குவார்கள். இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை கொண்டிருக்கும் மாருதி சுசுகி நிறுவனம், தீபாவளி ஆஃபரை அறிவித்துள்ளது. பல்வேறு வகையான மாடல்களுக்கு அதிகப்பட்சம் 48 ஆயிரம் ரூபாய் வரை சலுகைகளை அறிவித்துள்ளது.

1. மாருதி ஆல்டோ :

மாருதி பிராண்டில் அதிகம் வாங்கப்படும் பிராண்டுகளில் ஒன்றாக இருக்கும் ஆல்டோ மாடல் கார்களுக்கு அதிகப்பட்சம் 38 ஆயிரம் ரூபாய் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்டோ எல்.எக்ஸ்.ஐ, வி.எக்ஸ்.ஐ + வேரியண்ட் மற்றும் வி.எக்ஸ்.ஐ பிராண்டுகளுக்கு 43 ஆயிரம் ரூபாய் வரை சலுகை கொடுக்கப்படுகிறது. இதில், எக்ஸ்சேன்ஞ் ஆபர் உள்ளிட்டவையும் அடங்கும்.

2. ஆல்டோ சி.என்.ஜி (Alto CNG) :

ஆல்டோ சி.என்.ஜி கார்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கார் விற்பனை சரிவை சந்தித்தாலும், அவற்றில் அதிகம் விற்பனையான கார்கள் பட்டியலில் இந்த பிராண்ட் இடம்பிடித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இந்த பிராண்டின் மீது இருக்கும் நம்பகத்தன்மை காரணமாக கடந்த இரு சகாப்தங்களாக விற்பனை குறைவில்லாமல் நடந்து வருகிறது.

3. மாருதி சுசுகி எஸ்.பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso) :

கடந்த ஜனவரியில் அதிகம் விற்பனையான கார்களின் முதல் 10 பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஜனவரி மாதம், நிறுவனம் இந்த SUVயின் விற்பனையில் சிறிது அதிகரிப்பை பதிவு செய்தது. இந்த காலகட்டத்தில், இது 10,623 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. இந்த பிராண்டு தீபாவளி சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு 48 ஆயிரம் ரூபாய் வரை வழங்குகிறது. இதே பிராண்டில் சி.என்.ஜி வேரியண்ட் கார்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் வரை ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

4. மாருதி சுசுகி வேகன் ஆர் (Maruti Suzuki WagonR) :

மாருதியின் மற்ற பிராண்டுகளைப் போல் இல்லாமல், உயரமான ஹேட்ச்பேக் மாடலாக வேகன்ஆர் உள்ளது. விற்பனையிலும் கடந்த ஜனவரி மாதத்தை காட்டிலும் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள், எக்ஸ்சேஞ்ச் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளில் 17,500 ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும். வேகன் ஆர் சி.என்.ஜி மாடல் கார்கள் 12, 500 ரூபாய் வரை சலுகைகளை பெற முடியும்.

5. மாருதி சுசுகி ஸ்விப்ட் (Maruti Suzuki Swift) :

மாருதியின் மற்றொரு பிரபலமான ஹேட்ச்பேக் காரான ஸ்விஃப்ட் (Maruti Swift) விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், கடந்த ஆண்டு ஜனவரியை ஒப்பிடும்போது 14 விழுக்காடு குறைந்துள்ளது. இதனால், மாடலின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் அதிகபட்சமாக 24, 500 ரூபாய் வரை ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Also read... குவியும் ஆர்டர்களால் திணறும் மகேந்திரா - தார் SUV டெலிவரியில் சிக்கல்!

6. மாருதி சுசுகி டிசையர் (Maruti Suzuki Dzire)

மாருதி சுசுகி டிசையர் நேர்த்தியான டிசைனை பெற்றுள்ளது. இதன் முன்புற தோற்றம் புதிய ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி டிசையர் காரின் முந்தைய வெர்ஷனோடு (ஸ்விஃப்ட் டிசையர்) ஒப்பிடுகையில், தற்போதைய மாடல் ஹேட்ச்பேக் போல் அல்லாமல், முறையான காம்பேக்ட் செடான் காரின் தோற்றத்தில் அமைந்துள்ளது. இப்போது வாங்கினால் விழாக்காலச் சலுகையாக 19, 500 ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் மிச்சப்படுத்தலாம்.

7. மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா (Maruti Suzuki Vitara Brezza)

இந்தியாவின் காம்பேக்ட் SUV மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிதான் விற்பனையில் நம்பர்-1 மாடலாக இருந்து வருகிறது. 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வகை கார்களில் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக தொடர்ந்து தக்க வைத்து வருகிறது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா. பண்டிகைக் கால சலுகையாக வாடிக்கயாளர்கள் 17,500 ரூபாய் பெறலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: