காலாவதியான வாகனங்களை உடைப்பதற்காக, 15 ஆண்டுகளான வர்த்தக நோக்கில் ஓடிய வாகனங்கள் தகுதி பெறுகின்றன. இதர சொந்த உபயோக வாகனங்களை உரிமையாளர்கள் தாமே முன்வந்து உடைப்பதற்காக அளித்து விடலாம் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனியார் வாகனம் 20 ஆண்டுகளும், வாடகைக்கு இயக்கப்படும் கமர்ஷியல் வாகனங்கள 15 ஆண்டுகள் வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சுற்றுக் சூழலை பாதுகாக்கும் நோக்கில், தனியார் வாகனங்கள் அதிகப்படியாக 20 ஆண்டுகளுக்கும், வாடகைக்கு இயக்கப்படும் கமர்ஷியல் வாகனங்கள் அதிகப்படியாக, 15 ஆண்டுகள் வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
உலகமே, இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்தை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த நிர்மலா சீதாராமன், இந்தியாவில் உற்பத்தியாகும், இரண்டு தடுப்பு மருந்தை உலகத்திற்கு கொடுத்து உதவும் வகையில் நமது நாடு முன்னேறி இருப்பதாகத் பெருமையுடன் தெரிவித்தார்.
நாடு முழுவதும், சிறிய அளவில்ன சுகாதரா நிறுவனங்கள் அமைக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அப்போது தெரிவித்தார். மருத்துவத் துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்கள் மூலம் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றார்.
மேலும் படிக்க.... மோசமான நோய் தொற்று காலத்தில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன் - நிர்மலா சீதாராமன்
சுயச்சாப்பு நிலைமையை உக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.