பட்ஜெட் 2019 - கிராமப்புற சாலைகளுக்காக ₹19 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

கடந்த நான்கு ஆண்டுகளில் 28,531 கி.மீ தூரத்துக்கு சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

Web Desk | news18
Updated: February 1, 2019, 8:12 PM IST
பட்ஜெட் 2019 - கிராமப்புற சாலைகளுக்காக ₹19 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
சாலைப் போக்குவரத்து
Web Desk | news18
Updated: February 1, 2019, 8:12 PM IST
2019 இடைக்கால பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பியூஷ் கோயல், நெடுஞ்சாலைகள் மேம்பாடு என்பது இந்தியாவில் மட்டும் தான் அபரிமிதமாக உள்ளது எனப் பெருமை தெரிவித்தார்.

இன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பின்னர் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறை குறித்து நிதி அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், “உலகளவில் நெடுஞ்சாலைகளுக்கான முக்கியத்துவம் இந்தியாவில் அதிகம் உள்ளது. ஒரு நாளில் புதிதாக 27கிமீ தொலைவுக்கான நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்திய அரசு கிராமப்புறச் சாலைகள் மீதும் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக 2020-ம் நிதியாண்டில் இந்திய கிராமப்புறச் சாலைகளுக்காக சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது’ என்றார்.


இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், ‘கடந்த நான்கு ஆண்டுகளில் 28,531 கி.மீ தூரத்துக்கு சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. விரைவில் நாள் ஒன்றுக்கு 40 கி.மீ தொலைவுக்கு சாலைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இதற்காக பூமி ராஷி திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

மேலும் பார்க்க: பட்ஜெட் 2019... ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி இல்லை
First published: February 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...