Home /News /automobile /

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் BSA மோட்டார் சைக்கிள்கள்!

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் BSA மோட்டார் சைக்கிள்கள்!

BSA மோட்டார் சைக்கிள்கள்

BSA மோட்டார் சைக்கிள்கள்

மஹிந்திரா & மஹிந்திராவின் துணை நிறுவனமான கிளாசிக் லெஜெண்ட்ஸ், மோட்டார்சைக்கிளுக்கு உயிர்மூச்சு தந்துள்ளன. மேலும் வருகிற 2022ம் ஆண்டின் மத்தியில் இதன் அசெம்பிளியை தொடங்க நிறுவனம் உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய வாகன உற்பத்தியாளரும், உலகின் மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தியாளருமான மஹிந்திரா & மஹிந்திரா, கடந்த கால நட்சத்திர பிராண்டுகளின் வருகையை தற்போது உண்மையாக்கி வருகிறது. அந்த வகையில், 1972-ம் ஆண்டே செயலிழந்த பிரிட்டிஷ் பிராண்டான BSA மோட்டார் சைக்கிள்களின் உரிமையை 2016ல் ஆட்டோ ஜாம்பவானான மஹிந்திரா வாங்கியது. இருப்பினும், அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து நிறுவனம் எந்த தகவலும் வெளியிடாததால், அதன் உற்பத்தி வரிசையானது தடைபட்டதாகத் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமூக ஊடகங்களில் வெளியான சமீபத்திய பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் டீஸர் வீடியோ மூலம் அதன் மறுபிரவேசத்தை நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. மஹிந்திரா & மஹிந்திராவின் துணை நிறுவனமான கிளாசிக் லெஜெண்ட்ஸ், மோட்டார்சைக்கிளுக்கு உயிர்மூச்சு தந்துள்ளன. மேலும் வருகிற 2022ம் ஆண்டின் மத்தியில் இதன் அசெம்பிளியை தொடங்க நிறுவனம் உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பதிவு BSA-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோ நிறுவனத்தின் பல சின்னங்களைக் தொகுத்து வழங்கியுள்ளது.

1972 ஆம் ஆண்டு ஓய்வெடுக்கும் முன்பு பிராண்ட் பயணத்தின் உருவகமாக இந்த வீடியோ செயல்படுகிறது. இப்போது நிறுவனம் இந்திய சந்தைகளிலும் வெளிநாட்டு சந்தைகளிலும் விரைவில் தொடங்க தயாராகி வருகிறது. ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், “ரிட்டர்ன் ஆஃப் எ லெஜண்ட். நாங்கள் தற்போது பரிணாம வளர்ச்சியடைந்துள்ளோம், ஆனால் எங்களது டிஎன்ஏ மாறாமல் உள்ளது." எனக் கேப்ஷன் செய்யப்பட்டுள்ளது. மேலும் ‘#BSAisBack.’ என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டுள்ளது.

அந்த வீடியோ, நிறுவனத்தின் புதிய என்ட்ரியை பற்றி வெளிப்படுத்தினாலும், பைக்குகள் ரெட்ரோ டச் மற்றும் பிஎஸ்ஏ-வின் பாரம்பரியத்தை பராமரிக்கும் என்பதற்கு வீடியோவின் கேப்ஷன் உத்தரவாதம் அளிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் பிஎஸ்ஏ நிறுவனம், சில மணிநேரங்களுக்குப் பிறகு, BSA ஷூட்டிங் ஸ்டார் 1967ன் பழைய விளம்பரத்தின் மற்றொரு ட்வீட்டைப் பகிர்ந்து கொண்டது. மேலும் அந்த வீடியோவில் கேப்ஷன் செய்திருந்ததாவது, “எங்கள் டிக்கெட்டுகளை பெறுங்கள். BSA-வின் தைரியமான உலகம் மீண்டும் வந்துவிட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 



 

மஹிந்திரா & மஹிந்திரா விரைவில் பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்துவதற்கான பாதையில் இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கை சமீபத்தில் வந்திருந்தாலும், முதல் பிஎஸ்ஏ பைக் ஏற்கனவே இந்திய டார்மாக்கில் இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் கிளாசிக் லெஜெண்ட்ஸில் முதலீடு செய்ததிலிருந்து, JAVA மோட்டார்சைக்கிள்ஸ், BSA மற்றும் Yezdi போன்ற சின்னச் சின்ன பிராண்டுகளின் மறுபிரவேசம் மற்றும் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தன.

 



 

இந்த ஆண்டின் தொடக்கத்தில், கிளாசிக் லெஜெண்ட்ஸ் இந்தியாவில் யெஸ்டி ரோட்கிங்கிற்கான வர்த்தக முத்திரைக்கு விண்ணப்பித்திருந்தது. இது Yezdi மோட்டார்சைக்கிள்களின் மறுபிரவேசம் பற்றிய யூகத்தை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் ஜாவா ஏற்கனவே தனது ரெட்ரோ-தீம் மோட்டார் சைக்கிள்களை பிரத்யேக விற்பனை சேனல் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்போது, ​​Yezdi-யும் அதன் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. அந்த வரிசையில் அடுத்ததாக BSA மோட்டார் வாகனங்களும் மறுபிரவேசத்திற்கு தயாராகியுள்ளன.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Mahindra, Motor

அடுத்த செய்தி