புதிய மஹிந்திரா BS6 KUV100 NXT இந்தியாவில் அறிமுகம்..!
என்ஜின் வடிவமைப்பில் அப்டேட் செய்யப்பட்டுள்ளதால் விலையை உயர்த்தியுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மஹிந்திரா KUV100 NXT
- News18 Tamil
- Last Updated: April 24, 2020, 8:43 PM IST
புதிதாக இந்திய வாடிக்கையாளர்களுக்காக மஹிந்திரா நிறுவனம் BS6 ரக KUV100 NXT என்னும் காரை அறிமுகம் செய்துள்ளது. மஹிந்திரா 1.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் அளிப்பதை நிறுத்தியுள்ளதால் தற்போதைய சூழலில் 1.2 லிட்டர் mFalcon பெட்ரோல் என்ஜின் ரகம் மட்டுமே விற்பனைக்கு உள்ளது.
5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடனான இந்தக் காரின் அதிகப்பட்ச திறன் 82 bhp-க்கு டார்க் வெளியீடு 115 Nm ஆக உள்ளது. சில குறிப்பிட்ட அப்டேட்கள் மட்டும் கவர்வதாய் உள்ளன. 5 மற்றும் 6 இருக்கைகள் உடனான வடிவமைப்பு மட்டுமே புதிய அப்டேட்டில் வெளியாகி உள்ளது.
ஆனால், என்ஜின் வடிவமைப்பில் அப்டேட் செய்யப்பட்டுள்ளதால் விலையை உயர்த்தியுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. BS4 ரக காரைவிட புதிய BS6 ரக கார் 22 ஆயிரம் ரூபாய் விலை அதிகரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. K8 ட்ரிம் ரக கார் மட்டும் 28 ஆயிரம் ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு ஏற்ப 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டியரிங் கன்ட்ரோல், சாவி இல்லா கார் திறக்கும் வசதி, பார்க்கிங் கேமிரா, இரு விதங்களில் ஆன அலாய் சக்கரங்கள் என அசத்துகிறது மஹிந்திராவின் புதிய BS6 KUV100 NXT.
மேலும் பார்க்க: ஊரடங்கு நீட்டிக்கப்படுமா...? அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்