ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

குருவாயூர் கோவில் ஸ்ரீகிருஷ்ணருக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட புத்தம் புதிய எஸ்யூவி

குருவாயூர் கோவில் ஸ்ரீகிருஷ்ணருக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட புத்தம் புதிய எஸ்யூவி

ஸ்ரீகிருஷ்ணருக்கு காணிக்கை

ஸ்ரீகிருஷ்ணருக்கு காணிக்கை

குருவாயூரப்பன் ஸ்ரீகிருஷ்ணா ஆலயத்தில் மகிந்திரா நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு புதிய SUV வாகனத்தை காணிக்கையாகி வழங்கியது சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

குல தெய்வம் முதல் இஷ்ட தெய்வம் வரை, பக்தர்கள் தங்களால் இயன்ற பொருட்களை கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவார்கள். பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளுக்கு பெயர் பெற்ற கோவில்களில் திருப்பதியை அடுத்து, குருவாயூரும் பிரதானமான கோவிலாக விளங்குகிறது. கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு பக்தர்களுக்கும் மிகவும் அதிகமாக செல்லக்கூடிய குருவாயூரப்பன் ஸ்ரீகிருஷ்ணா ஆலயத்தில் மகிந்திரா நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு புதிய SUV வாகனத்தை காணிக்கையாகி வழங்கியது சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டது.

குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் பக்தர்கள் தங்களின் எடைக்கு சரியாக பல்வேறு பொருட்களை வழங்குவது பாரம்பரியமான காணிக்கை முறையாக பழக்கத்தில் உள்ளது. கற்கண்டு, சர்க்கரை, வாழைப்பழம். உள்ளிட்ட உணவு பொருட்கள் முதல் வெள்ளி, தங்கம், பணம் உள்ளிட்ட பலவேறு பொருட்கள் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.‌ புதிய வாகனம் வாங்கினால் இஷ்ட தெய்வத்தின் கோவிலுக்கு சென்று பூஜையும் அர்ச்சனையும் செய்வது வழக்கம். ஆனால், ஆலையக் காணிக்கையாக ஒரு கார் வழங்கப்படுவது இதுவே முதல் முறை.

ஆலயத்தின் அதிகாரிகள் இந்த காரை என்ன செய்யப்போகிறார்கள் என்பது பற்றியெல்லாம் கேள்வி எழுந்தது. ஆலயத்திற்கு வழங்கப்பட்ட இந்த எஸ்யூவியை ஏல்ம் விடுவதாக  கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏலத்தின் அடிப்படை விலையாக காருக்கு 15 லட்ச ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தை கேரள அரசாங்கம் நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SUV Offered to Lord Krishna

மகிந்திரா நிறுவனத்தின் சிகப்பு நிற லைஃப்ஸ்டைல் எஸ்யூவி பற்றிய தகவல்கள் வெளியான உடனேயே பலரின் கவனத்தையும் ஈர்த்தது. லிமிடெட் வெர்ஷன் மாடலான இந்த எஸ்யூவி குருவாயூர் கோவிலுக்கு வழங்கப்பட்டதை அடுத்து விரைவில் சந்தைப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கார் எப்போது அறிமுகமாகும் என்பது பற்றிய தகவல்களை மகிந்திரா நிறுவனம் விரைவில் அறிவிக்கும்.

ALSO READ |  இந்தியாவில் இந்த வருடம் வெளியான சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

காரை கோவிலுக்கு வழங்கியது போல, மிகவும் தனித்துவமான பொருட்களை இறைவனுக்கு காணிக்கையாக்குவது பல இடங்களில் நடந்து வருகிறது. ஆதரவில்லாமல் கோவிலில் யாசித்து வாழும் ஒரு வயதான பெண்மணி தான் சேர்த்து வைத்த பணத்தை காணிக்கையாக கொடுத்தார். கர்நாடகாவில் உள்ள சிக்மங்களூர் மாவட்டத்தில் காடூர் என்ற ஊரில் வசித்து வருகிறார் 65 வயதான முதிய பெண்மணி. காடூரில் இருக்கும் சாய்பாபா கோவிலில் யாசிப்பது தான் வழக்கம், அந்தப் பகுதியில் பலருக்கும் இந்த மூதாட்டியைத் தெரியும்.

ALSO READ |  கார்களுக்கு ஆண்டு இறுதி ஆஃபர்களை அறிவித்த டாடா மோட்டார்ஸ்!

அதே ஊரில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு இவர் சென்ற போது கோவிலுக்குள்ளே பிச்சை எடுத்து தான் வருகிறார் என்று நினைத்து பலரும் இவரை வெளியே விரட்ட முயற்சி செய்தனர்/ ஆனால் சில நிமிடங்களுக்கு பிறகு இவர் யாசித்து பெற்ற பணத்தை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தத் தான் வந்துள்ளார் என்பதை அறிந்து பலரும் மூதாட்டியுடன் புகைப்படங்களும், செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Suv car