முற்றிலும் BS-VI எரிபொருள்... மார்ச் 1 முதல் அப்டேட் ஆகும் பாரத் பெட்ரோலியம்!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது 15 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களை BS-VI எரிபொருள் விநியோக நிலையங்களாக அப்டேட் ஆகியுள்ளது.

முற்றிலும் BS-VI எரிபொருள்... மார்ச் 1 முதல் அப்டேட் ஆகும் பாரத் பெட்ரோலியம்!
பாரத் பெட்ரோலியம்
  • News18
  • Last Updated: February 27, 2020, 9:17 AM IST
  • Share this:
ஏப்ரல் 1-ம் தேதி இந்தியாவில் BS-VI மாசுக்கட்டுப்பாடு நடைமுறை அமலுக்கு வருகிறது. இத்தகைய சூழலில் BS-VI வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் BS-VI எரிபொருள் விநியோகத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.

வருகிற மார்ச் 1-ம் தேதி முதல் அனைத்து பாரத் பெட்ரோலிய நிலையங்களில் BS-VI எரிபொருள் வழங்கப்படும். நாட்டில் உள்ள சுமார் 14,800 பெட்ரோல் நிலையங்களிலும் இந்த நடைமுறை அமலுக்கு வரும். இந்த மாதத்தின் தொடக்கத்தில்தான் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது 15 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களை BS-VI எரிபொருள் விநியோக நிலையங்களாக அப்டேட் செய்தது.

விரைவில் மீதமிருக்கும் 12 ஆயிரம் இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிலையங்களிலும் BS-VI எரிபொருள் விநியோகம் அமலாக உள்ளது. BS-VI எரிபொருள் நிலையங்களாக அப்டேட் ஆக பாரத் பெட்ரோலிய நிறுவனம் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதாம்.


மேலும் பார்க்க: FASTag இல்லாத வாகனங்களிடம் இரட்டிப்புக் கட்டணம்... மிரள வைக்கும் அபாரத்தொகை வசூல்!
First published: February 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading