ஹைதராபாத்தில் ஷோரூம் - தென் இந்தியாவில் கால்பதித்த Boys & Machines!

Boys & Machines

ஸ்போர்ட்ஸ் ரகத்தில் மிகவும் அதிக விலை கொண்ட கார்களை குறிவைத்து, ஹைதராபாத் ஷோரூமில் இறக்க பாய்ஸ் அன்ட் மெஷின்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

  • Share this:
    ஹைதராபாத்தில் 4வது ஷோரூமை திறந்து தென் இந்தியா கார் மார்க்கெட்டுக்குள் Boys & Machines நிறுவனம் நுழைந்துள்ளது.

    பாய்ஸ் அன்ட் மெஷின்ஸ் கார் நிறுவனம், உயர்தர செகணன்ட் கார்களை விற்பனை செய்து வருகிறது. தென் இந்தியாவில் ஹைதராபாத் நகரில் 4வது கிளையை தொடங்கியுள்ளது. பஜ்ஜாரா நகரில் தொடங்கப்பட்டுள்ள இந்தக் கிளையானது 3,500 சதுர பரப்பளவில் உள்ளது. தென் இந்திய கார் ர்க்கெட் சந்தையில் அந்த நிறுவனத்தின் முதல் கிளை இது. ஸ்போர்ட்ஸ் ரகத்தில் மிகவும் அதிக விலை கொண்ட கார்களை குறிவைத்து, ஹைதராபாத் ஷோரூமில் இறக்க பாய்ஸ் அன்ட் மெஷின்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பஜ்ஜாரா நகரில் தொடங்கப்பட்டுள்ள கிளையானது செயல்படத் தொடங்கியுள்ளது. அனுபவம் மிக்க 15 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கார் விற்பனை தொடங்கியுள்ளது. கார்களை வாங்குவது, விற்பனை செய்வது, பண உதவி, இன்சூரன்ஸ் கவரேஜ் மற்றும் ஆர்.டி.ஓ டிரான்ஸ்பர்ஸ் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. கார்களுக்கு தேவையான வடிவமைப்பு தொடர்பான சேவைகளும் பாய்ஸ் அன்ட் மெஷின்ஸ் நிறுவனமே செய்து கொடுக்கிறது.

    உயர்தர செகணன்ட் கார்களை விற்பனை செய்யும் பாய்ஸ் அன்ட் மெஷின்ஸ் நிறுவனமான 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது டெல்லி, மும்பை, கொல்கத்தா நகரங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் கவர் செய்யும் விதமாக, கிழக்கு, வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள முக்கியமான நகரத்தில் பாய்ஸ் அன்ட் மெஷின்ஸ் நிறுவனத்தின் கிளைகள் தொடங்கப்படுகின்றன. அந்தவகையில், ஹைதராபாத் நகருக்கு டீலர்ஷிப் கொடுக்கப்பட்டு, கிளை தொடங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதிக விலை இருந்தாலும் வாங்குதற்கு பலர் தயாராக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் மேலும் 8 நகரங்களில் புதிய கிளையை தொடங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆகாஷ் சதூர்வேதி (Akash Chaturvedi), மிக குறுகிய காலத்தில் பெரிய வளர்ச்சியை நிறுவனம் அடைந்திருப்பதை நினைத்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.

    Also read... மும்பையில் எரிபொருள் நிரப்பும் மொபைல் வாகனம் - ரிலையன்ஸ் அறிமுகம்!

    ஹைதராபாத்தில் கொடுக்கப்பட்டுள்ள டீலர்ஷிப் மூலம் நிறுவனம் புதியதொரு உச்சத்தை தொட்டிருப்பதாகவும், Boys and machines போன்ற மிகச்சிறிய நிறுவனம் குறிகிய காலத்தில் இந்த இலக்குகளை அடைவது என்பது மிகப்பெரிய விஷயம் எனக் கூறியுள்ளார். உண்மையில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், நிறுவனத்தின் இந்த வளர்ச்சியை தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் ஆகாஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

    செகணன்ட் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு இருப்பதாக ஆகாஷ் சதூர்வேதி தெரிவித்துள்ளார். குவாலிட்டி, வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவற்றை பூர்த்தி செய்யும் வகையில் தங்களின் பிராண்ட் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். விரைலவில் மிக உயர்ந்த விலை கொண்ட யூஸ்டு ஸ்போர்ட்ஸ் கார்கள் ஹைதராபாத்தில் இறக்குமதியாகும் என ஆகாஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: