Home /News /automobile /

இன்னோவா கிறிஸ்டா டீசல் வேரியண்ட் காருக்கான முன்பதிவுகளை ஒத்திவைத்த டொயோட்டா நிறுவனம்

இன்னோவா கிறிஸ்டா டீசல் வேரியண்ட் காருக்கான முன்பதிவுகளை ஒத்திவைத்த டொயோட்டா நிறுவனம்

இன்னோவா கிறிஸ்டா

இன்னோவா கிறிஸ்டா

டீசல் கார்களுக்கான முன்பதிவு சில காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று டோயோட்டா தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    டோயோட்டா நிருவனத்தின் கிறிஸ்டா டீசல் வேரியண்ட் கார்களுக்கான முன்பதிவு சில காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சந்தையில் நூற்றுக்கணக்கான கார்கள் நம் கண்முன்னே இருக்கின்றன என்றாலும், மிகச் சில மாடல் அல்லது வேரியண்ட் கார்களுக்கு தான் அதிக டிமாண்ட் என்பது இருக்கும். நிறுவனங்கள் முடிந்த பட்சம் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக அதிக கார்களை உற்பத்தி செய்து கொடுத்து வருகின்றன.

    ஆனால், உற்பத்தித் திறனுக்கு மிகுதியாக வாடிக்கையாளர்களின் தேவை இருக்கிறது என்றால் என்ன செய்வது? வேறுவழியில்லை, முன்பதிவுகளை சில காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டியதுதான். அப்படித்தான் டொயோட்டா நிறுவனமும் செய்துள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் எம்பிவி வகை கார்களில் ஒன்று இன்னோவா கிறிஸ்டா. இதில் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட் கார்கள் உள்ளன. ஆனால், வாடிக்கையாளர்கள் இதன் டீசல் வேரியண்ட் கார்களைத் தான் அதிகப்படியாக விரும்புகின்றனர்.

    இதனால், அதிக வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ள நிலையில், டோயோட்டா கிறிஸ்டா காருக்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் காலம் அதிகமாகிவிட்டது. இதையடுத்து, டீசல் வேரியண்ட் கார்களுக்கான முன்பதிவு சில காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம், பெட்ரோல் வேரியண்ட் கிறிஸ்டா காருக்கு முன்பதிவு தொடர்ந்து நீடிக்கும் என்றும் டொயோட்டா நிறுவனம் கூறியுள்ளது.

    2005இல் அறிமுகம் செய்யப்பட்ட கார்:

    டொயோட்டா இன்னோவா கார் முதன் முதலாகக் கடந்த 2005ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல் எம்பிவி கார் மாடல் மார்க்கெட்டில் அது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்னோவா கிறிஸ்டல் மாடல் கார் என்பது 2.4 லிட்டர் டீசல் மோட்டாரைக் கொண்டது. இதில் 150 பிஹெச்பி இயந்திர திறன் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆகிய வசதிகள் உள்ளன.

    இதேபோல பெட்ரோல் வேரியண்ட் கார் என்பது 2.7 லிட்டர் பெட்ரோல் மோட்டாரைக் கொண்டது. இதில் 166 பிஹெச்பி இயந்திர திறன் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆடோமேடிக் கியர்பாக்ஸ் ஆகிய வசதிகள் உள்ளன.

    Also Read : இந்த எலெக்ட்ரிக் காரை விட இந்த பேட்டரியின் விலை அதிகமாம்.!

    இன்னோவா கிறிஸ்டல் மாடல் கார் விலை:

    இன்னோவா கிறிஸ்டா கார் விலை நீங்கள் தேர்வு செய்யும் வேரியண்ட் பொருத்து ரூ.19.5 லட்சம் முதல் ரூ.26 லட்சமாக உள்ளது. ஏற்கனவே புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்குக் கூடிய விரைவில் கார் டெலிவரி செய்யப்படும் என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Cars, Diesel, Toyota

    அடுத்த செய்தி