Home /News /automobile /

Maruti Ertiga 2022 மாடலுக்கான முன்பதிவு தொடங்கியது - முந்துங்கள்.!

Maruti Ertiga 2022 மாடலுக்கான முன்பதிவு தொடங்கியது - முந்துங்கள்.!

Maruti Ertiga 2022

Maruti Ertiga 2022

Maruti Ertiga 2022 | மாருதி சுஸுகி எர்டிகா காரில் 7 இன்ச் ஸ்மார்ட் பிளே ப்ரோ டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் வசதி மற்றும் சுஸுகி கனெக்ட் டெக்னாலஜி ஆகியவை உள்ளது. இது மட்டுமல்லாமல் இசட்.எக்ஸ்.ஐ. வேரியண்டிலும் எர்டிகா எஸ். சிஎன்ஜி கிடைக்கும்.

மேலும் படிக்கவும் ...
மாருதி எர்டிகா 2022 மாடலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என்று மாருதி சுஸுகி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடெங்கிலும் உள்ள மாருதி - சுஸுகி ஷோ ரூம்களில் வாடிக்கையாளர்கள் ரூ.11,000 செலுத்தி இந்தக் காருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். அதேபோன்று மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்றும் நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த மாடல், இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

புதிய மாடலில் உள்ள சிறப்பம்சங்கள் :

புதிய மாருதி எர்டிகா மாடலில் 1.5 லிட்டர் கே-சீரீஸ் டூயல் ஜெட் விவிடி என்ஜின் மற்றும் ஸ்மார்ட் ஹைப்ரிட் டெக்னாலஜி ஆகியவை இடம்பெற்றிருக்கும். இதில் 6 ஸ்வீடு ஆடோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்ட எர்டிகா மாடலை ஒப்பிடுகையில் இந்த காரின் டிசைனில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் செய்ல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரையிலும் மாருதி சுஸுகி நிறுவனம் 4 ஸ்பீடு டார்க்யூ கன்வெர்ட்டர் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது 6 ஸ்பீடு ஆடோமேடிக் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய கியர் பாக்ஸ் வசதியின் மூலமாக சந்தையில் போட்டித்தன்மையை அதிகரிப்பதாக எர்டிகா அமையும் என்று கூறப்படுகிறது. இதர மாருதி நிறுவன கார்களிலும் இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.



இன்டீரியர் வசதிகள் :

மாருதி சுஸுகி எர்டிகா காரில் 7 இன்ச் ஸ்மார்ட் பிளே ப்ரோ டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் வசதி மற்றும் சுஸுகி கனெக்ட் டெக்னாலஜி ஆகியவை உள்ளது. இது மட்டுமல்லாமல் இசட்.எக்ஸ்.ஐ. வேரியண்டிலும் எர்டிகா எஸ். சிஎன்ஜி கிடைக்கும்.

Also Read : Maruti Suzuki கார் வாங்க போறீங்களா..! ஹேப்பி நியூஸ்.. வேற லெவல் சலுகைகள்

7,50,000 வாடிக்கையாளர்கள் :

ஏற்கனவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட எர்டிகா மாடல்களுக்கு 7,50,000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். புதிய மாடலுக்கான முன்பதிவு தொடக்க நிகழ்ச்சியில், நிறுவனத்தின் (மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ்) மூத்த முதன்மை இயக்குநர் ஷஷாங் ஸ்ரீவஸ்தவா இந்தத் தகவலை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “மகிழ்ச்சிக்கு உரிய 7,50,000 வாடிக்கையாளர்களுடன் இந்திய எம்பிவி மார்கெட்டில் எர்டிகா ஏற்கனவே மிகுந்த போட்டியை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய சூழலில், நெக்ஸ்ட் ஜெனரேஷன் எர்டிகாவை அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த மாடலில் ஸ்டைல், இடவசதி, டெக்னாலஜி, பாதுகாப்பு, சௌகரியம் மற்றும் பயண அனுபவம் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பவர் டெரைன் மற்றும் மேம்படுத்தப்பட்ட 6 ஸ்பீடு ஆடோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆகியவை இதன் சிறப்புகளாக இருக்கும்’’ என்று கூறினார்.

Also Read : மஹிந்திரா கார்கள் மீது தாறுமாறான ஆஃபர்கள்!

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் :

நெக்ஸ்ட் ஜெனரேஷன் எர்டிகா என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாகவும், பெரும்பாலான இந்திய குடும்பங்களின் விருப்பத்திற்கு உரிய தேர்வாகவும் அமையும் என்று மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி சி.வி.ராமன் தெரிவித்தார்.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Maruti Suzuki

அடுத்த செய்தி