• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • இந்தியாவில் புதிதாக அறிமுகமான "BMW X5 xDrive SportX Plus" வேரியன்ட்கள் - சிறப்பம்சங்கள், விலை விவரம்!

இந்தியாவில் புதிதாக அறிமுகமான "BMW X5 xDrive SportX Plus" வேரியன்ட்கள் - சிறப்பம்சங்கள், விலை விவரம்!

BMW X5 xDrive SportX Plus வேரியன்ட்கள்

BMW X5 xDrive SportX Plus வேரியன்ட்கள்

இப்போது அறிமுகமாகி இருக்கும் BMW X5 SportX Plus வேரியன்ட் கார்களில் பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் டெயில்கேட், ஆம்பியண்ட் லைட், ஃபோர் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் , வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 12.3 அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், பார்க்கிங் டிஸ்டென்ஸ் கன்ட்ரோல் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

  • Share this:
புதிய BMW X5 xDrive SportX Plus-ன் வேரியன்ட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது BMW இந்தியா நிறுவனம். தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் BMW X5 xDrive30d SportX Plus மற்றும் BMW X5 xDrive40i SportX Plus ஆகிய இரு கார்களும் உள்நாட்டிலேயே அதாவது தமிழக தலைநகர் சென்னையில் இருக்கும் BMW ஆலையில் தயாரிக்கப்படுகின்றன என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம். இந்த இரு வேரியன்ட் சொகுசு கார்களையும் BMW இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று வாடிக்கையாளர்கள் புக் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள BMW X5 xDrive40i SportX Plus காரின் எக்ஸ்- ஷோரூம் விலை ரூ.77.90 லட்சம் ஆகும். மற்றொரு காரான BMW X5 xDrive30d SportX Plus-ன் எக்ஸ்- ஷோரூம் விலை ரூ .79.50 லட்சம் ஆகும். BMW X5 xDrive40i SportX Plus கார் பெட்ரோல் எஞ்சினுடனும், BMW X5 xDrive30d SportX Plus கார் டீசல் எஞ்சின் ஆப்ஷனுடனும் வருகிறது. தங்கள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் தொடர்பாக பேசிய BMW Group India-வின் தலைவர் விக்ரம் பவா, " BMW X5 மாடல் கார்கள் அதன் ஒருங்கிணைந்த ஆஃப்-ரோட் திறன்கள் மற்றும் டைனமிக் டிரைவிங் உள்ளிட்டவற்றை கொண்டு வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்போதும் வெற்றிகரமாக இருக்கும் BMW ஸ்போர்ட்டி ஆக்டிவிட்டி வெஹிகிள் இப்போது தன் வரிசையில் ஒரு புதிய, கவர்ச்சிகரமான கார்களை சேர்த்துள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள BMW SportX Plus கார்கள், அவற்றை கையாளும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல புதிய அனுபவங்களை மற்றும் உற்சாகத்தை தரும் என்று குறிப்பிட்டு உள்ளார். BMW-வின் புதிய ஸ்போர்ட் எக்ஸ் பிளஸ் வேரியன்ட் கார்களின் முன்புறத்தில் LED ஹெட்லைட்ஸ் மற்றும் ஃபாக் லேம்ப்ஸ்கள் அமைந்திருக்கின்றன. ஆனால் டாப்-என்ட் வேரியன்ட்களில் கொடுக்கப்படும் லேசர்லைட் தொழில்நுட்பம் இதில் கொடுக்கப்படவில்லை.

மேலும் இப்போது அறிமுகமாகி இருக்கும் BMW X5 SportX Plus வேரியன்ட் கார்களில் பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் டெயில்கேட், ஆம்பியண்ட் லைட், ஃபோர் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் , வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 12.3 அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், பார்க்கிங் டிஸ்டென்ஸ் கன்ட்ரோல் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. BMW லைவ் காக்பிட் தொழில்முறை சமீபத்திய BMW ஆப்பரேட்டிங் சிஸ்டம் 7.0 இல் இயங்குகிறது, இதில் 3 டி நேவிகேஷன், 12.3 இன்ச் அளவிலான கன்ட்ரோல் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும்.

Also read... இந்தியாவில் விற்பனைக்கு வந்த Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் - எப்படி புக் செய்வது?

satin-finish அலுமினியத்துடன் வடிவமைக்கப்பட்டு உள்ள ரூஃப் ரெயில்ஸ் காருக்கு நல்ல தோற்றம் மற்றும் செயல்பாட்டின் சரியான கலவையை வழங்குகிறது. BMW X5 xDrive30d கார் 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர் டர்போ-டீசல் யூனிட்டில் இருந்து 265 பிஎச்பி பவரையும், 1,500 - 2,500 rpm-ல் அதிகபட்சமாக 620 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. மேலும் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 6.5 வினாடிகளில் எட்டிவிடும். அதே போல BMW X5 xDrive40i கார் 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் 340 பிஎச்பி பவரையும், 1,500 - 5,200 rpm-ல் அதிகபட்சமாக 450 ன்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இது வெறும் 5.5 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: