இரண்டு புதிய ‘மினி’ கார்களை அறிமுகம் செய்தது பிஎம்டபிள்யூ

news18india
Updated: May 24, 2018, 4:04 PM IST
இரண்டு புதிய ‘மினி’ கார்களை அறிமுகம் செய்தது பிஎம்டபிள்யூ
மினி கேட்ச் கார்.
news18india
Updated: May 24, 2018, 4:04 PM IST
ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ இரண்டு புதிய ‘மினி’ வகை கார்களை அறிமுகம் செய்துள்ளது. மினி கேட்ச் மற்றும் மினி கன்வெர்டிபிள் ஆகிய இரண்டு மேம்படுத்தப்பட்ட புதிய மாடல் கார்களை இந்நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் சொகுசு வகை கார்களை தயாரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக `மினி’ என்ற பெயரில் கேட்ச் பேக் கார்களை தயாரித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த கார்களுக்கான வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. அதற்கேற்ற வகையில் பிஎம்டபிள்யூ நிறுவனமும் புதிய வகை கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

தற்போது இரண்டு புதிய மேம்படுத்தப்பட்ட கார்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘மினி கேட்ச்’ என்ற புதிய வகை காரின் விலை ரூ.29.7 லட்சம் (டெல்லி விற்பனையக விலை). மினி கன்வெர்டிபிள் காரின் விலை ரூ.37.10 லட்சம் (டெல்லி விற்பனையக விலை). இந்த இரண்டு புதிய மாடல் கார்களும் வரும் ஜுன் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்று பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த அறிமுகம் குறித்து பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பாவாக் கூறுகையில், “மினி கேட்ச் மற்றும் மினி கன்வெர்டிபிள் ஆகிய இரண்டு புதிய கார்களும் நிறுவனத்துக்கு பலம் சேர்க்கும். முக்கியமாக பிரீமியம் கேட்ச் பேக் கார்களில் இந்த இரண்டு கார்களும் முக்கிய இடத்தைப் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
First published: May 24, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...