Home /News /automobile /

இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் 3 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க உள்ள BMW

இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் 3 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க உள்ள BMW

BMW

BMW

BMW அதன் முதன்மையான எலக்ட்ரிக் SUV- iX-ஐ அடுத்த மாதம் டிசம்பர் 11-ஆம் தேதி வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW, தனது எலெக்ட்ரிக் மொபிலிட்டி ஜர்னியை (electric mobility journey) இந்தியாவில் விரைவுபடுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. இதற்காக அடுத்த 6 மாதங்களில் 3 எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த போவதாக BMW india அறிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை BMW india-வின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான விக்ரம் பஹ்வா உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் நாட்டில் ஆடம்பர பிராண்டிற்கான அடுத்த பெரிய உந்துதல் பேட்டரி வாகனங்கள் மூலம் இருக்கும் என்று அடிக்கோடிட்டு காட்டினார்.

BMW அதன் முதன்மையான எலக்ட்ரிக் SUV- iX-ஐ அடுத்த மாதம் டிசம்பர் 11-ஆம் தேதி வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. BMW தனது டெக்னலாஜி ஃபிளாக்ஷிப் ஆல் எலெக்ட்ரிக் SUV iX காரை அடுத்த மாதம் 11-ம் தேதி அறிமுகப்படுத்த இருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்த 3 மாதங்களில் ஆல்-எலெக்ட்ரிக் MINI சொகுசு ஹேட்ச்பேக் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இதை தொடர்ந்து ஆல் எலெக்ட்ரிக் மின்சார செடான் காரான BMW i4 இன்னும் 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும். இது தொடர்பாக பேசியுள்ள விக்ரம் பஹ்வா, அடுத்த 180 நாட்களில் இந்தியாவில் 3 ஆல் எலெக்ட்ரிக் தயாரிப்புகளை , BMW அறிமுகப்படுத்துவதை நீங்கள் காண்பீர்கள். நாங்கள் எங்கள் தயாரிப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறோம். இது முழுவதும் pure electric mobility என்பதை இலக்காக கொண்டது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அடுத்த மாதம் அறிமுகமாக உள்ள BMW iX காரானது, நிலைத்தன்மை கண்ணோட்டத்தில் இயற்கை பொருட்கள் அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களின் விரிவான பயன்பாட்டை கொண்டிருக்கும், மேலும் 100% "க்ரீன் எலெக்ட்ரிசிட்டி" கொண்டு தயாரிக்கப்படும் என்றார். மேலும் BMW iX முன் மற்றும் பின்புற axles-களுக்கு 2 எலெக்ட்ரிக் மோட்டார்கள் மூலம் இயக்கப்படும். தவிர 0-100 கிமீ வேகத்தை 6.1 வினாடிகளில் அடையும் திறன் கொண்டது என்றும் நிறுவனம் கூறி இருக்கிறது.BMW i4 எலெக்ட்ரிக் செடான் விஷன் டைனமிக்ஸின் உத்வேகத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 81.5 kWh லித்தியம்-அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, BMW i4 காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 590 கிமீ வரை இயக்க முடியும்.

உலகளவில் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வர உள்ள இந்த காரை விற்க இந்திய கார் சந்தைக்கு BMW நிறுவனம் முன்னுரிமை அளிக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான காரணங்கள் குறித்து கூறிய பவாஹ் "உலகளாவிய தயாரிப்புகள் எதுவாக இருந்தாலும், குறிப்பாக எலெக்ட்ரிக் தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வருவோம் என்று நாங்கள் எப்போதுமே உறுதியளித்து உள்ளோம். அதன்படி இந்தியாவில் பிரீமியம் செக்மென்ட்டில் உள்ள எங்கள் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு சமீபத்திய மற்றும் சிறந்த தயாரிப்புகளை கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு விரைவில் அடுத்தடுத்து எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார்.

Also read... அட்டகாசமான மாடலில் SG650 கான்செப்ட் பைக்கை அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்டு!

தவிர BMW நிறுவனம் இந்தியாவில் உள்ள 35 நகரங்களில் உள்ள டீலர் நெட்வொர்க்கில் உள்ள அனைத்து டச் பாயிண்ட்களிலும் ஃபாஸ்ட் சார்ஜர்களை நிறுவ உள்ளது. மேலும் எங்கள் அனைத்து டீலர்ஷிப்களிலும் 50 கிலோவாட் DC ஃபாஸ்ட் சார்ஜர்கள் பொருத்தப்பட்டிருக்கும். இவை எங்கள் வாடிக்கையாளர்கள் அணுக கூடியதாக இருக்கும் என்றும் விக்ரம் பஹ்வா கூறினார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Automobile, BMW car

அடுத்த செய்தி