Home /News /automobile /

புதிய BMW Cruiser பைக்குகள் முன்பதிவு இந்தியாவில் தொடக்கம்... விலை என்ன தெரியுமா? 

புதிய BMW Cruiser பைக்குகள் முன்பதிவு இந்தியாவில் தொடக்கம்... விலை என்ன தெரியுமா? 

BMW R 1250 RT

BMW R 1250 RT

BMW R 1250 RT & K 1600 Range Bookings | புதிய பிஎம்டபிள்யூ ஆர்1250 ஆர்டி ஆனது BMW Boxer இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இதில் டபுல் சிலிண்டர் இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 136 பிஎச்பி மற்றும் 143என்எம் முறுக்குவிசையை உற்பத்தி செய்கிறது.

மேலும் படிக்கவும் ...
இந்திய சந்தையில் பீரியம் ரேஞ்ச் பைக்குகளை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமான ஜெர்மனி நாட்டின் BMW மோட்டோரேட் நிறுவனம் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை பிஎம்டபிள்யூ பிராண்ட் பைக்குகள் குறைந்தபட்சம் 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 42 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனம் டூரிங் மோட்டர் பைக்குகளில் புதிய வகைகளுக்கு முன்பதிவை தொடங்கியுள்ளது. பிஎம்டபிள்யூ ஆர்1250 ஆர்டி, கே1600 ஜிடிஎல், கே1600 பக்கர் மற்றும் கே1600 கிராண்ட் அமெரிக்கா ஆகிய விலையுயர்ந்த பைக்குகளுக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த புதிய வகை மோட்டர் பைக்குகள் அனைத்தும் வரும் மே மாதம் முதல் ஒன்றன் பின் ஒன்றாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என பிஎம்டபிள்யூ மோட்டோரேட் நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட மாடலை வாங்க வேண்டும் நினைப்பவர்கள் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் டீலர்களிடம் முன்பதிவு செய்து கொள்ளும் படியும், பொருளாதார ரீதியாக தடைகள் இருந்தாலும் அதற்கான தனிப்பட்ட பைனாஸ் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ ஆர்1250 ஆர்டி ஆனது BMW Boxer இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இதில் டபுள் சிலிண்டர் இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 136 பிஎச்பி மற்றும் 143என்எம் முறுக்குவிசையை உற்பத்தி செய்கிறது. இது மெலிதான புதிய முன்பக்கத்தையும், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் புதிய வைசர் ஆகியவை சவாரிக்கு உங்களுடைய சவாரிக்கு சிறப்பான தோற்றத்தை கொடுக்கிறது.டெலிமெட்ரி, நேவிகேஷன், இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இணைக்கப்பட்ட பயன்பாட்டு அம்சங்களை வழங்கும் பெரிய 10.25-இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே உள்ளது. பிஎம்டபிள்யூ ஆர்1250 ஆர்டி ஆனது ஏபிஎஸ் ப்ரோ, ரேடருடன் ஆக்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், கஸ்டமைஸ் செய்யக்கூடிய பட்டன்கள், டைனமிக் டிராக்ஷன் கன்ட்ரோல், மல்டிபிள் ரைடிங் மோடுகள், ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், அடாப்டிவ் ஹெட் லேம்ப்கள், எலக்ட்ரானிக் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன், சீட் ஹீட்டிங், டிபிஎம்எஸ், ஸ்போர்ட்ஸ் சைலன்சர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

Also Read : இந்தியாவில் வாகனங்களை அறிமுகம் செய்யும் ஜப்பானிய நிறுவனம்

புதிய பிஎம்டபிள்யூ கே1600 ஜிடிஎல், கே1600 பக்கர் மற்றும் கே1600 கிராண்ட் அமெரிக்கா என்கிற மூன்று லக்சரி க்ரூஸர் பைக்குகளையும் அறிமுகப்படுத்த உள்ளது. இவை மூன்றும் பார்ப்பதற்கு தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருந்தாலும், ரைடிங் நிலைப்பாடு மற்றும் பயணிகளுக்கு வழங்கும் சவுகரியம் ஆகியவற்றில் ஒன்றுக்கு ஒன்று சற்றே மாறுபடுகிறது.கே1600 ஜிடிஎல் ஆனது 160 பிஎச்பி மற்றும் 180என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1,649சிசி அளவுள்ள ஆறு சிலிண்டர் எஞ்சின் கொண்டது. பைக்கில் முழு LED ஹெட்லேம்ப்கள், கார்னரிங் செயல்பாடு, டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல், இன்ஜின் பிரேக் கன்ட்ரோல், டைனமிக் ESA, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ப்ரோ, டயர் பிரஷர் கன்ட்ரோல், ஹீட் கிரிப்ஸ், ஹீட் சீட், சக்திவாய்ந்த ஆடியோ சிஸ்டம், கிரவுண்ட் லெவல் லைட்டிங் மற்றும் 113 லிட்டர் ஸ்டோரேஜ் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது.

Also Read : ஜிடி 120 -எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம் - என்ன ஸ்பெஷல்?

இந்த பைக்குகளின் இந்திய மதிப்பிலான ஷோரூம் விலை என்னவாக இருக்கும் என்பது அறிவிக்கப்படாத நிலையில், கிட்ட தட்ட 28 லட்சம் வரை இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, India, New BMW bike

அடுத்த செய்தி