ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

ஸ்டைல் ஆக வெளியானது BMW R 1250 R மற்றும் R 1250 RT பைக்குகள்..!

ஸ்டைல் ஆக வெளியானது BMW R 1250 R மற்றும் R 1250 RT பைக்குகள்..!

BMW R 1250 RT. (source: BMW)

BMW R 1250 RT. (source: BMW)

BMW R 1250 R பைக்கில் 6.5 இன்ச் TFT ஸ்கிரீன் உள்ளது. BMW R 1250 RT பைக்கில் 5.7 இன்ச் TFT ஸ்கிரீன் உள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

BMW மோட்டார்ராட் சார்பில் புதிதாக R 1250 R மற்றும் R 1250 RT ஆகிய இரண்டு பைக்குகள் வெளியிடப்பட்டுள்ளன.

BMW R 1250 R பைக் 15.95 லட்சம் ரூபாய்க்கும் R 1250 RT பைக் 22.50 லட்சம் ரூபாய்க்கும் விறபனைக்கு வந்துள்ளது. இரண்டு பைக்குகளும் CBU ரகங்களாகவே வெளியாகி உள்ளன. வாடிக்கையாளர்கள் BMW டீலர்களிடம் பைக் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இரண்டு பைக்குகளிலுமே முன்பக்க ஸ்பாய்லர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் கோல்டன் ப்ரேக் கேலிபர்ஸ், ரேடியர்ட்டர் கவர் மற்றும் ஸ்டெயின்லெஸ் டேங்க் கவர் ஆகியன இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு பைக்குகளிலுமே 1254cc 2 சிலிண்டர் உடனான பாக்ஸர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

7,750 rpm-க்கு 100 kW திறன் வெளிப்படுகிறது. 6,250 rpm க்கு டார்க் வெளியீடு 143 Nm ஆக உள்ளது. BMW R 1250 R மற்றும் R 1250 RT பைக்குகளில் இரண்டு ரைடிங் மேட்கள் உள்ளன. பாதுகாப்புக்காக ASC சிஸ்டம், ABS ப்ரோ சிஸ்டம் ஆகிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு மாடல் பைக்குகளிலுமே ஒரே மாதிரியான சிறப்பு அம்சங்களே கொடுக்கப்பட்டுள்ளன.

டயர் பிரஸர் சிஸ்டம், திருட்டைத் தடுக்கும் அலார்ம் சிஸ்டம், ஜிபிஎஸ், க்ரூஸ் கன்ட்ரோல், சாவி இல்லாத ரைடிங் ஆகியன கவனம் ஈர்கின்றன. மலைச்சாலைகளில் பயணிக்க ஏற்ற வகையிலான ‘ஹில் ஸ்டார்ட் கன்ட்ரோல்’ சிஸ்டம் கவர்கிறது. BMW R 1250 R பைக்கில் 6.5 இன்ச் TFT ஸ்கிரீன் உள்ளது. BMW R 1250 RT பைக்கில் 5.7 இன்ச் TFT ஸ்கிரீன் உள்ளது.

மேலும் பார்க்க: விற்பனைக்கு வரும் ஹூண்டாய் எலான்ட்ரா... தொடங்கியது முன்பதிவு!

துணை முதலமைச்சர் வீட்டு வாசலில் ₹1 கோடி பணம் மோசடி...

First published:

Tags: New BMW bike